எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. என்பதகேற்ப பயணத்துக்கான ஏற்பாடுகளை பண்ண ஆரம்பித்தோம்...
முதலில் தாய்லாந்து பயணத்திற்கு தேவையான டிக்கெட்... விசா.. தாய்லாந்து பாத்(பணம்) மாற்றுவது என முதற்கட்டவேலைகள் தொடங்கினோம் ...டிக்கெட் ரெடி..அடுத்து விசா ஆன்லைனில் எடுப்பதை விட அங்கேயே போய் ஆன்அரைவல் விசா எடுப்பது தான் ஈஸி என்று சொன்னதால்அதை அங்கேயே எடுக்கலாம்னு முடிவெடுத்தாச்சு..டிராவல்ஸில் இருந்து பட்டாயா வில் 2 நாள் பாங்காங்கில் 2 நாள் என ரூம் புக் பண்ணி வவுச்சர் அனுப்பியிருந்தார் ...பணத்தை தாய்பாத்தாக ஒரு ஆளுக்கு 10000 பாத் என 20000 பாத் மாற்றி எடுத்துக் கொண்டோம் விசா விற்கு காட்ட இது அவசியம் ... விசா பார்ம் ,வெள்ளை பேக்கிரவுண்டில் 4 ஃபோட்டோ , பாஸ்போர்ட் காப்பி.தங்குமிடங்களின் பதிவுகாப்பி என எல்லாம் விசாவிற்கு ரெடி பண்ணி ஃபைல் பண்ணி வைத்து கொண்டோம்..இதற்கு நடுவில் தாய்லாந்தா போறிங்க வேற ஊருக்கு போகலாம்ல என்று முகத்தை சுழித்து கேட்வர்களிடம் ஹி ஹி என மழுப்பினாலும் அய்யய்யோ என்ன இப்படி சொல்றாங்கனு கொஞ்சம் குழப்பமாவும் ஆயிடுச்சு..அவ்வளவு கெட்ட பேர் எடுத்து வச்சிருக்கு அந்த ஊர் 🤣.பையனும் மருமருகளும் தாய்லாந்து க்கு நாங்க கியாரண்டினு சொன்ன பிறகு தான் தெளிவாச்சு..அப்புறம் தான் முக்கியமான விஷயம் ஷாப்பிங் 😝மகளும் மருமகளும் பார்த்து பார்த்து எடுத்து தந்த புது டிரஸை எல்லாம் சூட்கேஸ்ல போட்டு பேக் பண்ணி மகளும் நானும் முதன்முறையா குடும்பத்தை விட்டு தனியா கிளம்பியாச்சு....மகன் மருமகள் பேத்தி ஏர்போர்ட் வந்தாங்க கணவர் வீட்டு வாசலில் இருந்து வழியனுப்பும் போதே கண்ணெல்லாம் கலங்கிட்டார் போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே னு பாடாத குறைதான்😜...)ஏர்போர்ட் இப்போ மிக பெரியதா இருந்தாலும் ரொம்ப காலியா இருக்க மாதிரி ஃபீலாகுது... ஏர்போர்ட் பார்மாலிட்டிஸ் எல்லாம் ஸ்மூத்தா முடிஞ்சு மூன்றரை மணிநேர பயணத்தில் பாங்காங் Don Muang airport ல் போய் இறங்கினோம்..... தொடரும்
#Thailand #Motherdaughter #Travelstories