செவ்வாய், 28 ஜூன், 2011

உன்னைத்தவிர .......

எப்போதும் அமைதியான எனது விழிகள்
உன்னைக் கண்டதும் பரப்பரப்பதை கண்டு
உன்மேல் எனது பிரியத்தை புரிந்து கொண்டாள் அம்மா ........

யாருக்காகவும் காத்திராத என் கால்கள்
உன்னைக் காணவே கால்கடுக்க காத்திருப்பதை கண்டு
உன்மேல் நான் கொண்ட நேசத்தை தெரிந்து கொண்டார் அப்பா ....

ஏக்கம் கொண்ட மனதின் துயரையும்
தூக்கமில்லா பொழுதுகளையும் கண்டதால்
உனக்கான என் அன்பினை புரிந்து கொண்டாள் அக்கா.....

காரணம் இல்லாத சிரிப்பினையும்
உளறலான பேச்சினையும் ,என் தவிப்புகளையும் பார்த்து
உன் மேல் நான் கொண்ட ஆசையை அறிந்து கொண்டான் அண்ணன் .......

எல்லோரும் தெரிந்து கொண்டனர்
உன் மீதான எனது காதலை
உன்னைத்தவிர ................

10 கருத்துகள்:

 1. முதல் முதலாக முதல் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்

  பதிலளிநீக்கு
 2. >> Your comment will be visible after approval.

  ஹி ஹி ஹி இருக்கட்டும்

  பதிலளிநீக்கு
 3. >>எல்லோரும் தெரிந்து கொண்டனர்
  உன் மீதான எனது காதலை
  உன்னைத்தவிர .

  காதலின் வரமும் அதுதான், சாபமும் அதுதான்

  பதிலளிநீக்கு
 4. டைட்டிலா டியூப்லைட்னு வெச்சிருக்கலாம் ஹா ஹா

  பதிலளிநீக்கு
 5. >>>எல்லோரும் தெரிந்து கொண்டனர்
  உன் மீதான எனது காதலை
  உன்னைத்தவிர ................ \\

  டச்சிங்க் லைன்ஸ்

  ரோஜாவை ஒவ்வொரு முறையும் அட ரோஜா நல்லாருக்கே ந்னு சொல்லமுடியுமா? அது ரோஜாவுக்கே போர் அடிச்சுடுமே .. உங்க கவிதை என்னைக்கு சோடை போச்சு .. செம டச்சிங்க்

  பதிலளிநீக்கு
 6. எல்லோரும் தெரிந்து கொண்டனர்
  உன் மீதான எனது காதலை
  உன்னைத்தவிர ....
  very bad.....cho.....

  பதிலளிநீக்கு
 7. முதல் தடவை வந்திருக்கிறேன்... உங்களுடைய ப்ளாக் டிசைனிங்'காக 75 மார்க்குகள் தாராளமாக போடலாம்...கவிதைக்கு கண்டிப்பாக 95 மார்க்குகள்...... ( எதிர்காலத்தில் கவிதாயினி போன்று வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.... ) வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 8. காதலில் பகிர்வுகள் அவசியம். . . நல்ல வரிகள்...

  பதிலளிநீக்கு