செவ்வாய், 13 மார்ச், 2012

இன்றும் ......

பால் வாங்குவதிலும் பேப்பர் வாங்குவதிலும்
ஆரம்பிக்கிறது காலை பொழுது
கணவனிடம் பணிவிடை செய்ய தொடங்கி
பிள்ளைகளிடம் தாயாய் சேவை செய்து
மாமனார் மாமியாரிடம் நல்ல மருமகளாய் பணிந்து
நாள்ளெல்லாம் உழைத்து களைத்து
இரவு கண்மூடி உறங்க போகும் வேளையில்
நினைவினில் வருகிறது ....
ரசிக்காமல் போன தோட்டத்து ரோஜாவும்
கேட்காமல் போன இளையராஜாவின் புதியவெளியீடும்
விசாரிக்காமல் போன அம்மாவின் கால்வலியும்
எழுதாமல் மறந்து போன கவிதை வரிகளும்
வரிசையாய் நினைவுக்கு வருகின்றன........
நாளையேனும் எனக்கென ஒதுக்க வேண்டும்
சிலமணி நேரத்தை என்று எண்ணியபடியே
கழிகிறது இன்று இரவும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........

4 கருத்துகள்:

 1. >>ஆரம்பிக்கிறது காலை பொழுது
  கணவனிடம் பணிவிடை செய்ய தொடங்கி

  1985 உடன் அந்தக்காலம் மலை ஏறிடுச்சு, இப்போ கணவன் தான் பாதி சமையல் செய்ய்றான் அவ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 2. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_14.html

  பதிலளிநீக்கு
 3. நேற்றுதான் இதுபோல் ஒரு ஆதங்கத்தை ஒரு பெண் அதிகாரியும் தெரிவித்தார். தன் கடமை முடிந்து விட்டதாகவும்(பிள்ளைகளின் திருமணம்), தனக்காக இனி வாழ வேண்டும் என்று.......

  இது என்ன பெண்களுக்கு மட்டுமா, ஆண்களுக்கு இல்லையா....

  தங்கள் கவிதை தங்களுக்காக மட்டுமா?.....

  அப்படியிருந்தால் தங்கள் மனதிலோ அல்லது காகிதத்திலே உறங்கியிருக்கும், வலையில் உலா வந்திருக்காது.

  இருப்பினும் உழைப்பு என்பது தனக்காக எல்லோருக்குமான உழைப்பு என்பதும் அதை ஒவ்வொருவரும் கடைபிடிப்பது என்பதும் உயர்ந்ததுதான்

  உழைப்பினுடே ஓய்வு என்பது தேவைதான். அதுவும் இசையில் மனம் லயிப்பது.......

  அப்படியொரு வாழ்வை வாழ்வது காட்டுவோம் அனைவரும் வாழ

  பதிலளிநீக்கு