ஞாயிறு, 25 மார்ச், 2012

காதல் கவிதைகள்

காத்திருத்தல்

காத்திருப்பதின் வலி உனக்கு
புரிய வைக்க காத்திருக்க வைத்தேன்
இப்போதும் எனக்கு தான் வலிக்கிறது
உன்னை காத்திருக்க வைத்ததால்......

மணம்
என்றுமே மணத்ததில்லை மல்லிகை
இன்று உன் கையில் வாங்கி சூடிய போது
மணத்தது போல் .....

புகைப்படம்
உற்று பார்க்காதே என்னிடம் உள்ள
உன் புகைப்படத்தை
என் உதட்டின் ரேகைகள் மறைத்திருக்கிறது
உன் முகத்தின் அழகை ....

நினைவு விதை
வேரோடு பிடுங்குவதாய் எண்ணி
முழுவதும் களைந்து எறிந்தேன்
உன் காதலை
நியாபக தூறல்கள் விழும் போதெல்லாம்
துளிர்த்து எழுகிறது எங்கோ ஆழத்தில்
படிந்திருக்கும் உன் நினைவு விதைகள் .....

பார்வை
ஆயிரம் வார்த்தைகள் பேசும்
உன் உதடுகளை விட
உன் ஆழ பார்வை ஒன்றே
என் மீதான உன் காதலை
அதிகம் சொல்கிறது ......

6 கருத்துகள்:

 1. இறுதிக்கவிதை... டச்சிங்..வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. >>உன் ஆழ பார்வை ஒன்றே
  என் மீதான உன் காதலை
  அதிகம் சொல்கிறது ......

  கிணற்றடியில் மலர்ந்த காதலோ? ஹி ஹி

  பதிலளிநீக்கு
 3. en manadhil eruntha varthaikalin oru korvaiyaha erunthadhu ungalin kathiruthal kavithai....

  பதிலளிநீக்கு
 4. http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_24.html
  இன்று தங்களின் பதிவு வலைச்சரத்தில் செல்வி நுண்மதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. நினைவு விதை
  வேரோடு பிடுங்குவதாய் எண்ணி
  முழுவதும் களைந்து எறிந்தேன்
  உன் காதலை
  நியாபக தூறல்கள் விழும் போதெல்லாம்
  துளிர்த்து எழுகிறது எங்கோ ஆழத்தில்
  படிந்திருக்கும் உன் நினைவு விதைகள் ..
  fantastic lines...

  பதிலளிநீக்கு