சனி, 27 அக்டோபர், 2012

பெயரை தொலைத்தவள்

உன்னை முதன்முதலில்
பார்த்த போது வேணு மாமாவின்
மனைவி என்று எல்லோருக்கும் அறிமுகபடுத்தப்பட்டாய்
பாலா பிறந்த பின் எல்லோரும் பாலாவின்
அம்மா என்றே அழைத்தனர்
மாமாவின் கடையை பார்த்து கொண்டதால்
கடைக்காரம்மா என்று அழைத்தனர் பலர்
நேசத்தையும் பிரியத்தையும் மட்டுமே பகிர
தெரிந்த உன்னை பிரிந்து புகுந்த வீடு
சென்ற அன்று உன்னை கட்டியணைத்து
அழுது பிரிந்தவள்
பின்னொரு நாளில் விசாலாட்சி இறந்து விட்டாள்
என்கிற செய்தி கேள்வியுற்ற போதினில் அந்த செய்தி
எளிதாய் என்னை கடந்து சென்றது
உன் பெயர் தொலைத்த காரணத்தினால் .....


3 கருத்துகள்:

 1. இப்படிதான் ஒவ்வொருவரும் பெயரை தொலைத்துக் கொண்டிருக்கிறார்.

  அதுசரி சமூகத்தில் நாம் அனைவரும் யாரையாவது சார்ந்துதான் வாழ வேண்டும்

  பதிலளிநீக்கு
 2. தொலையாத பெயர்களே தேவையாய் இருக்கிறது. அருமை

  வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான கவிதை,

  பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_14.html

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு