பஞ்சபூதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பஞ்சபூதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 மே, 2011

பஞ்சபூதம்


நெடுந்தொலைவில் இருந்தாலும்
தகித்து எரிக்கின்றாய்
என்னை சூரியனாய்....
காதல் நினைவினில் மூழ்கும்
போதெல்லாம் சில்லென குளிர்விக்கிறாய்
மழை நீராய்...
சில வேளைகளில் சூறாவளியாய்
சுழன்றடிகிறாய் என் நினைவினில்
காற்றாய்.....
காணும் இடங்களில்லெல்லாம்
நீயே நிறைந்திருகிறாய்
என் ஆகாயமாய் .....
எனக்கெல்லாமாய் இருப்பதினால்
அடக்கமாகின்றேன் உன்னிடம்
என் நிலமாய் ....
பஞ்சபூதங்கள் அடங்கியது
அகிலம் மட்டுமல்ல
என் காதலும் கூட .......