மனிதம் தொலைத்தவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனிதம் தொலைத்தவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 ஜூலை, 2011

மனிதம் தொலைத்தவன்

நேற்று வரை நோயின் பிடியில்
நல்ல உணவுக்கும் வழியில்லை
மருந்து வாங்கவும் பணமில்லை
குடிக்க நீர் தரவும் ஆளில்லை .....

சதை எதுவும் இல்லாமல் எலும்பும் தோலுமாய்
கிழிந்த பாயில் கிடந்த அந்த மனிதரின் இறப்பில் ....

இன்று ஊரெங்கும் இரங்கல் போஸ்டர்
தேர்போல் ஜோடனை பல்லாக்கு
சின்னதும் பெரியதுமாய் மாலைகள்
தெருவெங்கும் பூக்குவியல்
அரசியல்வாதிகளின் அணிவகுப்பு அதில்
கண்ணீரில்லாத கண்களை துடைத்து கொண்டு
தகப்பனின் சாவில் சுயவிளம்பரம்
தேடும் இவனுமொரு மனிதனா ...?
மனிதம் தொலைத்த மிருகமா ...........