புதன், 4 பிப்ரவரி, 2015

50 வது பிறந்தநாள் கலாட்டா.....

          பிறந்தநாள் எல்லோருக்கும் எப்போதும் வருவது தானே அதை என்ன கொண்டாடுவது என்பது என் கணவரின் கருத்து....திருமணம் ஆனா வருடத்தில் இருந்தே அவரது பிறந்தநாள் அன்று பரிசு குடுத்து அவரை அசத்துவது என் வழக்கம்...அவர் அதை பற்றி திட்டினாலும்  பெரிதாக எடுத்து கொள்வது இல்லை ...பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவர்களும் அதையே பின்பற்றினார்கள்...இந்த வருடம் கணவரின்  50 வது பிறந்தநாள்... எப்போதும் போல முதலிலேயே சொல்லி விட்டார் பரிசு எதுவும் வாங்க கூடாது என்று ...நாங்களும் சரி சரி என்று தலையை ஆட்டி கொண்டோம்...இந்த பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட நானும் பிள்ளைகளும் ரகசிய திட்டம் தீட்டினோம்...முதலில் ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி ஹால் புக் பண்ணினோம்.. அவருக்கு தெரியாமல் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் என 50 பேர்க்கு  அழைப்பு விடுத்தோம்...7 மணிக்கு எல்லோரும் பார்ட்டி ஹாலில் ஆஜராகி விட வேண்டும் என்றோம்.இந்த விஷயம் எந்த காரணம் கொண்டும் அவருக்கு தெரிந்து விட கூடாது என்பதை மட்டும் எல்லோருக்கும் சொல்லி விட்டோம்....எல்லோரும் வந்ததை உறுதி படுத்தி கொண்ட பிறகு வழக்கம்  போல டின்னர்க்கு போகலாம் என்று அவரை அழைத்து கொண்டு கிளம்பினோம்...ஹோட்டல் அறையில் நுழைந்தவுடன் அனைவரும் ஒன்றாக  சேர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள் ...சில நிமிடங்களுக்கு அவருக்கு எதுவுமே புரியவில்லை ...மிக பெரிய இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்ற அவரை தேற்றவே சிறிது நேரம் பிடித்தது...சர்ப்ரைஸ் எல்லோருக்கும் பிடித்த விஷயம் தானே...அவரும் அதை வெகுவாக ரசித்தார்...அவருக்கு  மறக்க முடியாத 50 வது









பிறந்தநாள் கொண்டாட்டத்தை பரிசாக கொடுத்ததில் எனக்கும் பிள்ளைகளுக்கும் மிக்க மகிழ்ச்சி ......(கலந்து கொண்ட உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி )

வெள்ளி, 19 டிசம்பர், 2014

பயணங்களின் பதிவுகள் (பூதப்பாண்டி)

  பூதப்பாண்டி இந்த ஊர் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ..ஆனால் எனக்கு மிக முக்கியமான ஊர் ...என் வேர்களின்  பூமி..அம்மா அப்பா பிறந்து வளர்ந்த ஊர் ..என் தாத்தா பாட்டி முப்பாட்டன்கள் வாழ்ந்த ஊர் ...கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிறிய ஊரான இதில் நடக்கும் போது என் முன்னோர்கள் வாழ்ந்த மண்ணில் நடக்கிறோம் என்ற  உணர்வு பூர்வமான பந்தத்தை உணர்ந்தேன்..என் அப்பா பிறந்து வளர்ந்த வீட்டை அங்கு தங்கி இருந்தவர்களின் அனுமதி பெற்று பார்த்து புகைப்படம் எடுத்து வந்த போது அப்பா கூட இருப்பது போல் இருந்தது...பூதபாண்டி கோவில்,





,குளம்,தாடகை மலை ,என்று அம்மா ,அப்பா வளர்ந்த இடத்தை பார்த்து வந்தது மனதிற்கு நெகிழ்வாக இருந்தது .....ராஜராஜ சோழன் நடந்த தஞ்சையிலும்,பல்லவர்கள் நடந்த மாமல்லபுரதிலும் நடந்த போது ஏற்பட்ட சிலிர்ப்புக்கு சிறுதும் குறைவில்லை என் தாத்தாவும் ,ஆச்சியும் நடந்த மண்ணில் நடந்த போது .......

வெள்ளி, 14 நவம்பர், 2014

பயணங்களின் பதிவுகள் (மஹாபலிபுரம்)

மஹாபலிபுரம் பார்க்க செல்வோம் என்று அக்கா சொன்னதும் அவசரமாய் தலையாட்டி மறுத்தோம் நானும் தம்பியும் ..பிள்ளைகள் அதற்கு மேல் போட்டிங் ,மால்,சினிமா என்று வரிசைபடுத்தினர்..வரலாற்று ஆசிரியர்களான அம்மாவும் அக்காவும் வற்புறுத்தி அழைத்ததால் கிளம்பினோம்  ...சிறு வயதில் பார்த்த இடம் தான் என்றாலும் அதன் பெருமைகள் அவ்வளவாக மனதில் பதிந்ததில்லை ..  அங்கு வெளி நாடுகளில் இருந்து இதை காணவே வரும் வெளிநாட்டவர்  அதன் பெருமைகளை வியந்து போற்றுவதை பார்க்கும் போது நமக்கே வெட்கமாக தான் இருக்கிறது, வெளிநாடுகளில் இருக்கும் இடங்களை  போற்றி பாராட்டும்  நாம் நம் நாட்டின் கலை பொக்கிஷத்தை போற்ற மறந்து தான் விடுகிறோம்..பிள்ளைகளுக்கும் அதை சொல்வதை தவிர்த்து விடுகிறோம்...அக்காவும் அம்மாவும் சிவகாமியின் சபதம் கதையை விவரித்து எங்களுக்கு விவரம் சொல்லி கொண்டே வந்தனர்...எவ்வளவு அரிய கலை பொக்கிஷத்தை பெற்றிருக்கிறோம் நாம் ...காலம் கடந்தாலும் நம்  தமிழர்களின் அரிய திறமையை நாமும்   நம் பிள்ளைகளுக்கும் சொல்லி புரிய வைக்க வேண்டும் என நினைத்து கொண்டோம் ...




வியாழன், 30 அக்டோபர், 2014

cango caves 

புதன், 29 அக்டோபர், 2014

       பற்று

"பற்றற்று வாழ்ந்திட
பழகி விட்டேன்"
"உன் நினைவற்று மட்டும்
வாழ முடியவில்லை" .....

திங்கள், 13 அக்டோபர், 2014

நன்னம்பிக்கை முனை ....

                  நன்னம்பிக்கை முனை     

                            cape of good hope 

நாம் அனைவருமே அறிந்த  வார்த்தை நன்னம்பிக்கை முனை ...சிறு வயது வரலாறு படத்தில் இதை படிக்காமல் நாம் கடந்து வந்து இருக்க முடியாது ...வாஸ்கோடகாமா என்னும் போர்த்துகீசிய மாலுமி இந்தியாவிற்கு பாதையை கண்டு பிடிக்கும் வழியில் இந்த இடத்தை கண்டு ,இது தான் இந்தியா என்று முதலில் நம்பினார் ..பின் அது தென்ஆப்ரிக்கா என்பதை அறிந்தார் ...இதற்கு முன் பலர் இந்தியாவை கண்டுபிடிக்க முயன்று தோல்வி அடைந்ததால் ,இவர் அடுத்த பயணத்தின் போது இங்கிருந்து தொடங்கி இந்தியாவை அடைந்து விடலாம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டதால் அந்த முனைக்கு நன்னம்பிக்கை முனை என பெயர் வைத்ததாக வரலாறு ....பழங்கால கல் படிகட்டுகள் .கலங்கரை விளக்கம் ,மூன்று புறமும் சூழ்ந்த கடல் .சில்லென்ற சீதோஷணம் அங்கு பயணிக்கும் அனைவருக்கும் வாழ்வில் இன்பத்தையும் நன்னம்பிக்கையும் அளிக்கும் முனை என்றே கூறலாம் ....தென் ஆப்ரிக்கா பயணத்தில் நான் மிகவும் ரசித்த ஒரு இடம் இது ....

                

 

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

சில புகைப்படங்களும் அதன் கதைகளும் 

1.சவுத் ஆப்பிரிக்காவில்நைஸ்னா மற்றும் டிசிகாமா என்ற இரு ஊர்களும் தனி தனியாக இருந்தது அதனை இணைத்து இந்த  பாலம் உருவாக்கிய பிறகு தான் இரண்டு ஊர்களும் இணைந்ததாம் ....

2.டிசிகாமா காடு பழம்பெரும் காடு ...ஆயிரகணக்கான வருடத்து மரங்கள் உள்ளது  ....காட்டில்உள்ள  1000 வருடத்து மரம் இது ...அதை ஒரு சுற்றுலா தளமாக்கி உள்ளனர்..அடர்ந்து பரந்து விரிந்துள்ள இந்த மரத்தை  பார்க்கவே  வியப்பாக உள்ளது .. ..

3.பழமையான மரத்தின் விவரம் அடங்கிய பலகை  ....

4.நகரத்து வாழ்வை மறந்துஅடர்ந்த  காட்டினுள் தங்கி  இருப்பது புதுவிதமான அனுபவம் ....காட்டினுள் மரத்தினால் ஆன சகல வசதிகளும் நிறைந்த அறைகள் அமைத்துள்ளனர் ..

5.இந்த மரவீட்டினில் என் மகள் ஐஷுவின் குறும்பு....

6.அப்பாவும் மகனும் பில்லியர்டசில் பிஸி .....