எப்போதும் காலை வேளையில் மட்டுமே பயணப்பட்டு இருந்த திருப்பதிக்கு இந்த முறை இரவில் பயணம் மேற்கொண்டோம் ...முன்பெலாம் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியெங்கும் அடர்த்தியான மரங்கள் இருபக்கமும் நிறைந்து இருக்கும் மரங்களின் ஊடே பயணிப்பது அருமையாக இருக்கும் ..இப்போது மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு சாலை மிக பெரியதாக ஆகி விட்டது ..ஆனால் வறண்ட சாலையில் பயணிப்பது தான் சலிப்பாக இருக்கிறது... மலை மேல் ஏறும் போது இரவு பத்து ஆகி விட்டது ...செக் போஸ்டில் தீவிரவாதி போலவே பரிசோதனை செய்கின்றனர் ..மேல் ஏறி செல்லும் போது வானத்தில் நட்சத்திரங்கள் குறைவாக இருந்தாலும் கீழ நகரத்தின் மின்விளக்குகளின் ஒளி மிக அழகாக நட்சத்திரங்கள் கீழ கொட்டி கிடப்பது போல் அவ்வளவு அழகு...,அதை பார்க்கவே மீண்டும் ஒரு பயணம் செல்லலாம்..நாங்கள் மேல் சென்று சேர்வதற்கு வெகுநேரம் ஆகி விட்டதால் அங்கு ஹோட்டல் எதுவும் இல்லை...தெருவோர கடைகள் மட்டுமே இருந்தது...அதெற்கென ஒரு இடம் ஒதுக்கி தெருவெங்கும் பாய் விரித்து வைத்துள்ளனர்..இரவு முழுவதும் சுட சுட உணவு கிடைக்கிறது....தெருவில் உண்பதும் ஒருவித புது அனுபவமாக இருந்தது ...காலை தரிசனம் செய்ய சென்றோம் ...அன்று கூட்டம் குறைவாக தான் இருந்தது ஆனாலும் தேவை இல்லாமல் இரண்டு மணி நேரம் காக்க வைத்து பின்பு கூட்டம் சேர்ந்ததும் நெருக்கடியாக அனுப்புகின்றனர்....கடவுளுக்கு எதற்கு விளம்பரம் என்றே தெரியவில்லை ..ஆனாலும் கருவறையின் முன் ஜருகண்டி ஜருகண்டி என்று பிடித்து தள்ளுவது குறைந்திருகிறது ...பொறுமையாக நின்று பார்த்து வரலாம்... எல்லா இடங்களைம் மிக சுத்தமாக பரமரிகின்றனர் ....சூடான பால் உணவு தண்ணீர் எல்லாம் இலவசமாகவே எல்லா இடங்களிலும் தருகின்றனர்...ஒவ்வொரு முறையும் திருப்பதி புது அனுபவத்தை தருகின்றது....
சனி, 11 ஜூலை, 2015
செவ்வாய், 16 ஜூன், 2015
.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய் ....
என் மகன் ...மழலை பருவத்தில் அவனது ஆச்சி விளையாட்டாய் சொன்ன பைலட் ஆகணும் என்கிற வார்த்தையை துரத்தி பிடித்தவன்....சிறுவயதில் யார் கேட்டாலும் நான் பைலட் ஆக போகிறேன் என்பதே அவனது பதிலாக இருக்கும்...வளர் பருவத்தில் கூட அவனது சிந்தனையை சிதற விட்டதோ மாற்றியதோ இல்லை ...அவனுகென்று ஆசை வைத்து கொள்ளாமல் வற்புறுத்தலுமின்றி எங்கள் கனவுகளை தன கனவாக மாற்றி துரத்தியவன் ....கண்ணுக்குள் வைத்து வளர்த்த மகன் பக்கத்து இடங்களுக்கு கூட தனியே அனுப்பியது இல்லை அப்படிப்பட்டவனை முதன் முறையாக பிரிந்து வெளிநாடு அனுப்பி வைத்து கலங்கி நின்ற எங்களை தேற்றி சென்றவன்....தடைகளை தாண்டி தனிமையில் தடுமாறாமல் தனது படிப்பை வெற்றிகரமாக முடித்து கமர்ஷியல் பைலட் (commercial pilot )பட்டம் பெற்று திரும்பும் எனது மகனை மனதார வாழ்த்துங்கள் தோழர் தோழிகளே........ .....
வெள்ளி, 12 ஜூன், 2015
சில பயணங்களும் சில நினைவுகளும் ....(.2007..ஆக்சிடென்ட் அனுபவம் )
நண்பர்கள் இருவரின் குடும்பத்துடன் ஏற்காடு மலைக்கு டெம்போ டிராவலர் வண்டியி டூர் சென்று இருந்தோம் ... ... இரண்டு நாட்கள் மிக சந்தோஷமாக முடிந்தது ... மூன்றாம் நாள் மலையில் இருந்து இறங்கி கொண்டிருந்தோம்...நான்காவது வளைவின் போது டயரில் இருந்து வாடை வர ஆரம்பிச்சது ..அதனால் வேகம் குறைந்த வண்டி சற்று மெதுவாகவே வளைவில் இறங்க ஆரம்பித்தது...மேலும் சில வளைவுகளை கடந்ததும் கண்ட்ரோல் இழந்த வாகனம் வளைவில் வேகமாக இறங்க ஆரம்பித்தது ..டிரைவர் பிரேக் பிடிக்க முடியாமல் இடது பக்கம் மலையின் மீது மோதினார்....வாகனம் வலது புறமாக சாய்ந்து விழுந்து பள்ளத்தின் நோக்கி தேய்த்து கொண்டே போனது தடுப்பு சுவற்றின் மீது மோதிய வாகனம் பள்ளத்தில் விழாமல் நின்றது...(நல்லவேளை அந்த தடுப்பு சுவர் கலப்படம் இல்லாத சிமென்டில் கட்டியது போலிருகிறது) ...எல்லோருக்கும் நல்ல அடி ...வண்டி சாய்ந்தவுடன் நினைவில் நின்றது ....நமக்கா ஆக்சிடன்ட் என்பதும் அடுத்தது சாக போகிறோம் என்ற நினைவு ........நல்ல வேலை அனைவரும் உயிர் பிழைத்தோம் ......
பின் சேலத்தில் வந்து ட்ரீட்மென்ட் எடுத்து பின் வீடு வந்து சேர்ந்தோம்...மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த அந்த டூர் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது ....பின் சேலத்தில் வந்து ட்ரீட்மென்ட் எடுத்து பின் வீடு வந்து சேர்ந்தோம்...மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த அந்த டூர் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது ....
புதன், 10 ஜூன், 2015
வியாழன், 16 ஏப்ரல், 2015
பயணங்களின் பதிவுகள் (கொல்லி மலை)
பயணங்களின் பதிவுகள் (கொல்லி மலை)
பயணம் எப்போதும் நம்மை புத்துணர்ச்சி கொள்ள வைக்கும்.வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு வருடம் ஒரு முறையாவது பயணம் சென்று வருவது வாழ்க்கையை புதியதாய் உணர வைக்கும் ...அதிக தூரம் உள்ள நாடுகளுக்கு தான் போக வேண்டும் என்பதில்லை..நமக்கு மிக அருகிலேயே நாம் பார்காமல் தவற விட்ட பல அருமையான இடங்கள் உள்ளது...அப்படி நாங்கள் வெகுநாளாய் தவற விட்டிருந்த கொல்லிமலை பார்க்க கிளம்பினோம் ...மலை மேல் ஏறும் வழி சற்று குறுகலாகவே இருக்கிறது எதிரில் வாகனம் வரும் போது மிக கவனமாக செல்ல வேண்டும்...72 கொண்டைஊசி வளைவுகள் கொண்டது இந்த மலை ...ஏறும் போதினில பச்சை மூலிகையின் வாடையும் குளிரும் வரவேற்க்கும்...ஏறியவுடன் சோளக்காடு என்ற ஊர் வருகிறது..அங்கு தான் கடைகள் இருக்கும்...அங்கிருந்து 3 கிலோமீட்டர் போனதும் ரிசார்ட்ஸ் இருக்கிறது...நாங்கள் P.A.ரிசார்ட்ஸ் என்னும் இடத்தில் தங்கினோம்..மிளகு கொடியும் பட்டை மரங்கள்,தைல மரங்கள் சூழ்ந்து அழகாய் காட்சியளிக்கும் அதில் சுத்தம் என்பது மட்டும் இல்லை...மிக குளிராக இருக்கும் என்பதால் அதற்கேற்ற உடைகலை எடுத்து செல்வது நல்லது ....அரசு மூலிகை பண்ணை ,தற்கொலை முனை,அய்யாறு அருவி,கொல்லிப்பாவை கோவில்,சீக்குப்பாறை,அறப்பாலீஸ்வரர் ஆலயம் ஆகாய கங்கை படகு சவாரி ,வீயு பாயிண்ட் என பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளது...ஓவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருந்தாலும் பயணம் மிகவும் ரசிக்கும் படி உள்ளது...மேகங்களின் அடர்த்தியுள் நாம் பயணிப்பது அருமையாக இருக்கும்...வரும் வழியில் வீட்டிற்கு வேண்டிய தானியங்கள் அனைத்தையும் வாங்கி வரலாம்...மலை தேன் கிடைக்கும் ..பச்சை மிளகு பறித்து வரலாம்,பிள்ளைகளும் இந்த பயணத்தை மிகவும் ரசிப்பார்கள்...மொத்தத்தில் கொல்லிமலை பயணம் நமக்குள் ஏகாந்தமான மன அமைதியை தரும் இடமாகும்......
புதன், 4 பிப்ரவரி, 2015
50 வது பிறந்தநாள் கலாட்டா.....
பிறந்தநாள் எல்லோருக்கும் எப்போதும் வருவது தானே அதை என்ன கொண்டாடுவது என்பது என் கணவரின் கருத்து....திருமணம் ஆனா வருடத்தில் இருந்தே அவரது பிறந்தநாள் அன்று பரிசு குடுத்து அவரை அசத்துவது என் வழக்கம்...அவர் அதை பற்றி திட்டினாலும் பெரிதாக எடுத்து கொள்வது இல்லை ...பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவர்களும் அதையே பின்பற்றினார்கள்...இந்த வருடம் கணவரின் 50 வது பிறந்தநாள்... எப்போதும் போல முதலிலேயே சொல்லி விட்டார் பரிசு எதுவும் வாங்க கூடாது என்று ...நாங்களும் சரி சரி என்று தலையை ஆட்டி கொண்டோம்...இந்த பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட நானும் பிள்ளைகளும் ரகசிய திட்டம் தீட்டினோம்...முதலில் ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி ஹால் புக் பண்ணினோம்.. அவருக்கு தெரியாமல் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் என 50 பேர்க்கு அழைப்பு விடுத்தோம்...7 மணிக்கு எல்லோரும் பார்ட்டி ஹாலில் ஆஜராகி விட வேண்டும் என்றோம்.இந்த விஷயம் எந்த காரணம் கொண்டும் அவருக்கு தெரிந்து விட கூடாது என்பதை மட்டும் எல்லோருக்கும் சொல்லி விட்டோம்....எல்லோரும் வந்ததை உறுதி படுத்தி கொண்ட பிறகு வழக்கம் போல டின்னர்க்கு போகலாம் என்று அவரை அழைத்து கொண்டு கிளம்பினோம்...ஹோட்டல் அறையில் நுழைந்தவுடன் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள் ...சில நிமிடங்களுக்கு அவருக்கு எதுவுமே புரியவில்லை ...மிக பெரிய இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்ற அவரை தேற்றவே சிறிது நேரம் பிடித்தது...சர்ப்ரைஸ் எல்லோருக்கும் பிடித்த விஷயம் தானே...அவரும் அதை வெகுவாக ரசித்தார்...அவருக்கு மறக்க முடியாத 50 வது
பிறந்தநாள் கொண்டாட்டத்தை பரிசாக கொடுத்ததில் எனக்கும் பிள்ளைகளுக்கும் மிக்க மகிழ்ச்சி ......(கலந்து கொண்ட உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி )
பிறந்தநாள் கொண்டாட்டத்தை பரிசாக கொடுத்ததில் எனக்கும் பிள்ளைகளுக்கும் மிக்க மகிழ்ச்சி ......(கலந்து கொண்ட உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி )
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
















