அம்மாவின் எழுபதாவது பிறந்தநாளைக்கு என்ன பரிசளிப்பது என்று சற்றே குழப்பமாக இருந்தது ...எது அவர்களுக்கு சந்தோஷம் தரும் என யோசித்து பார்த்த போது ஒரு யோசனை வந்தது....அவர்களது அப்பா வைத்த தென்னை மரத்தை பற்றி இன்றும் அம்மா பெருமையாக பேசி கொண்டு இருப்பார்கள்...அது போல் இவர்களது கையால் மரம் நாளைய தலைமுறையினர் இதை பற்றி பேசி இவரை நினைவில் வைத்து கொள்ள வகைசெயயலாமே என்று முடிவு செய்து அதற்கு தேவையான மரகன்றுகள் உரம் எல்லாம் வாங்கி சென்று பரிசளித்தோம் ...உண்மையாகவே அம்மா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள் ... அம்மாவின் பிறந்தநாள் அன்று அவரது கைகளாலே மரங்களை நட செய்தோம் ...அவருக்கு மிக பிடித்த விஷயத்தை பரிசளிததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.....
செவ்வாய், 14 மார்ச், 2017
ஞாயிறு, 5 மார்ச், 2017
பயணங்களின் பதிவுகள் தேனி மாவட்டம் (வீரபாண்டி )
இந்த இடத்தை பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை ....அந்த வழியாக மேகமலை செல்லும் போது வழயில் நீரோடும் இந்த இடத்தை பார்த்ததும் மறுநாளே போக முடிவெடுத்தோம்....பம்ப் செட்டை பார்த்தாலே விடாத நாங்கள் இவ்வளவு அழகிய இடத்தை பார்த்ததும் மறுநாள் கிளம்பி போனோம் ...கோவில் அருகில் செல்லும் இந்த ஆற்றில் சபரிமலை செல்லும் சாமிகளே அதிக அளவில் வருகின்றனர்....ஓடும் ஆற்றில் குளிக்காமல் நீர் வழியும் இடத்திற்கு கொஞ்சம் சிரமப்பட்டே சென்றோம்....வழி எங்கும் திறந்தவெளி கழிப்பறை போல இருக்கிறது...அதை சீர்படுத்தி விட்டால் மிக அழகான இடம் இது ...வழிந்தோடும் தண்ணீரின் உள்ளே அமர்ந்து குளிக்கையில் விழும் தண்ணீர் நம் முன் கண்ணாடி போல் தெரிகிறது ....மிக அழகான அனுபவமாக இருக்கிறது .....இது போன்ற நீரோட்டத்தை இதற்கு முன் பார்த்ததில்லை என்பதால் மிகவும் ரசித்தோம் .....அதிக அளவில் கூட்டம் இல்லாத நேரமாக இருந்ததால் நிம்மதியாக குளித்தோம்.......நகராட்சி ஒரு கழிப்பறை அமைத்தால் இது ஒரு அழகிய சுற்றுலாத்தளமாக இருக்கும் .....

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017
தம்பி வீட்டில் மதிய உணவு...மட்டன் குழம்பு ரெடி பண்ணி இருந்தாங்க ...ஒரு வாய் சாப்பிட்ட எல்லோரும் முகத்தை சுளிதோம் ...குழம்பில் ஏதோ கெமிக்கல் வாடை ....அடுத்த உருண்டை சாப்பிடவே முடியவில்லை....கறியில் தான் ஏதோ பிரச்சனை என்று நினைத்து எல்லோரும் கறிகடைகாரனை திட்டி கொண்டே சாப்பிடாமல் எடுத்து வைத்து விட்டோம் ...600 ரூபாய் கொடுத்து வாங்கிய கறி இப்படி வீணாகி போய் விட்டதே என்று எல்லோருக்கும் வருத்தமாகி விட்டது ...மறுநாள் பீன்ஸ் பொரியல் செய்து சாப்பிட உடகார்ந்த போது அதிலேயும் அதே வாடை ...குழம்பி விட்டோம் ...கொஞ்சம் ஆராய்ச்சி செய்து இரண்டுக்கும் பொதுவான விஷயத்தை கண்டு பிடித்தோம்....தேங்காய் ...இரண்டிலேயும் தேங்காய் தான் பொதுவான விஷயமாக இருந்தது ...அந்த தேங்காயின் மீதியை சாப்பிட்ட போது தெளிவாகியது....தேங்காயின் துண்டில் அதிகமான கெமிகல் வாடை....இப்போது தான் முதன் முறையாக தேங்காயில் கூட இப்படி ஒரு வாடை வரும் என்பதை அறிந்து கொண்டோம்.... தேங்காய் அதிக அளவில் அடர்த்தியாக விளைய தென்னை மரத்தில் அதிகமாக போடப்படும் கெமிக்கல் உரத்தினால் அந்த கெமிக்கலின் மணம் தேங்காய் முழுவதும் பரவி உள்ளதாக சொன்னார்கள் ....இது உண்மையா என்று தெரியவில்லை ..ஆனால் தேங்காயை சமையலில் சேர்க்கும் போது இனி சோதித்து பார்க்காமல் சேர்க்க கூடாது என்று தெரிந்து கொண்டேன் .....
திங்கள், 20 பிப்ரவரி, 2017
வெள்ளிவிழா 25 (அக்டோபர் 3/2016)
Time Travel ...
2016.....கால் நூற்றாண்டு காதல்வாழ்க்கை பயணம் இன்று வெள்ளிவிழா காண்கிறது...திருமணவாழ்வு இனித்திட சகிப்புதன்மை,பொறுமை,தன் துணையின் குணமறிந்து அவர்களின் குணத்தோடு அவர்களை ஏற்று கொள்ளுதல் ,நிபந்தனை இல்லா அன்பு இவையே இல்லற வாழ்வை சிறக்க செய்திடும்......நான் பகிர்ந்த வாழ்வின் நினைவுகளை படித்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு மிக்க நன்றி. ..என்றும் இந்த அன்பான வாழ்த்துக்கள் எங்களை மகிழ்வுடன் வாழ வைக்கும். .......உங்கள் ஆசிகளுடன் இத்தொடரை செய்கிறேன்..... . — celebrating 25 th anniversary with Saidai Damu.

வெள்ளிவிழா (october 3/2016
)சிறப்பு பதிவு 24
Time Travel
2015......மகளை பொறுத்த வரை அவளுக்கு இப்போது பதினெட்டு வயதென்பதே அவருக்கு உணர்வில்லை. .இப்பவும் அவரை பொறுத்தவரை அவள் பாப்பா தான்.
..
எங்கள் காதலில் ஆரம்பித்த இந்த வாழ்க்கை கதை இன்று என் மகனின் காதலில் வந்து நிற்கிறது. ..மகன் ஒரு பெண்ணை விரும்பி அவரிடம் அவளை பற்றி சொல்லி அறிமுகப்படுத்தி ஒரே ஒரு ஒற்றை வரியில் அவரிடமிருந்து சம்மதம் பெற்றான். ..அது
"அப்படியே அம்மாவின் குணம் அவளுக்கு "என்பது தான் அது .....அந்த ஒற்றை வரிக்காகவே சம்மதம் தெரவித்தார் அவர்...... — remembering someone very special with Saidai Damu.

) சிறப்பு பதிவு 23
TIME TRAVEL
2013...2014.......மகன் பிரைவேட் பைலட் ட்ரைய்னிங் முடித்து கமர்சியல் பைலட் படிப்பு படிக்கஆரம்பித்தான்...அவன் படிக்கும் பிளையிங் பள்ளிக்கு செல்லலாம் என முடிவெடுத்து நான் கணவர் மகள் மூவரும் சென்றோம்...சவுத் ஆப்ரிக்கா வில் மகன் படிக்கும் பள்ளியில் முதல்முறையாக அவரை தனது பிளைட்டில் அமர வைத்து மகன்ஓட்டிய போது அவர் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை....மேலும் அவரை மகிழ செய்தது அங்கு எல்லோரும் மகனை இவரது பெயரை சொல்லியே அழைகின்றனர்....அங்கெல்லாம் தந்தை பெயரை சொல்லியே அழைகின்றனர்....எங்கேயோ ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து ஆட்டோ ஓட்டுனராக வாழ்வை தொடங்கிய தாமு என்கிற பெயர் கடல் கடந்து சென்று ஒரு பள்ளியின் வரவேற்பறையில் உள்ள ஒரு புகைபடத்தில் vicky damu என்று இருந்ததை பார்த்த பொழுது அவர் பிறவிபயனை அடைந்தது போல பெருமிதமானார்.......தொடரும்
— remembering someone very special with Saidai Damu.) சிறப்பு பதிவு 23

) சிறப்பு பதிவு 22
TIME TRAVEL
2012....மகனுக்கு சிறுவயதில் இருந்தே பைலட் ஆக வேண்டும் என்று விருப்பம்....வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று சொன்ன உடனே அவருக்கு அதில் விருப்பம் இல்லாமல் போய்விட்டது...எல்லா இடங்களிலும் நானும் மகனும் மட்டுமே சென்று விசாரித்து கொண்டு வந்தோம்...அவர் அதில் ஆர்வம் காட்டவே இல்லை....முடிவாக சவுத் ஆப்ரிக்கா சென்று படிப்பது என்று முடிவாகி விட்டது....விசாவிற்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் கவனித்தோம்...பணம் கொடுப்பதை தவிர வேறு எதுவும் அவர் செய்யவில்லை....ஒருவழியாக விசாவும் வந்தது...அதை பார்த்ததும் அவர் கண்களில் கண்ணீர்....எனக்கும் மகனுக்கும் ஒன்றும் புரியவில்லை...கொஞ்சம் நிதானித்ததும் விசா கிடைக்க கூடாதென்று எல்லா கடவுளிடமும் வேண்டி கொண்டு இருந்தாராம்....இதை கேட்டதும் மகனுக்கும் எனக்கும் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை...பின் ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி மகன் கிளம்பினான்...மகனை பிரிந்து ஒரு மாதம் மிகவும் கஷ்டப்பட்டார்....எந்நேரமும் வீடியோ கால் போன்கால் என்று பேசி பேசி ஒருவழியாக சமாதானம் ஆனார்.........தொடரும்
— remembering someone very special with Saidai Damu.) சிறப்பு பதிவு 22

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)