வெள்ளி, 19 டிசம்பர், 2014
பயணங்களின் பதிவுகள் (பூதப்பாண்டி)
பூதப்பாண்டி இந்த ஊர் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ..ஆனால் எனக்கு மிக முக்கியமான ஊர் ...என் வேர்களின் பூமி..அம்மா அப்பா பிறந்து வளர்ந்த ஊர் ..என் தாத்தா பாட்டி முப்பாட்டன்கள் வாழ்ந்த ஊர் ...கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிறிய ஊரான இதில் நடக்கும் போது என் முன்னோர்கள் வாழ்ந்த மண்ணில் நடக்கிறோம் என்ற உணர்வு பூர்வமான பந்தத்தை உணர்ந்தேன்..என் அப்பா பிறந்து வளர்ந்த வீட்டை அங்கு தங்கி இருந்தவர்களின் அனுமதி பெற்று பார்த்து புகைப்படம் எடுத்து வந்த போது அப்பா கூட இருப்பது போல் இருந்தது...பூதபாண்டி கோவில்,
வெள்ளி, 14 நவம்பர், 2014
பயணங்களின் பதிவுகள் (மஹாபலிபுரம்)
மஹாபலிபுரம் பார்க்க செல்வோம் என்று அக்கா சொன்னதும் அவசரமாய் தலையாட்டி மறுத்தோம் நானும் தம்பியும் ..பிள்ளைகள் அதற்கு மேல் போட்டிங் ,மால்,சினிமா என்று வரிசைபடுத்தினர்..வரலாற்று ஆசிரியர்களான அம்மாவும் அக்காவும் வற்புறுத்தி அழைத்ததால் கிளம்பினோம் ...சிறு வயதில் பார்த்த இடம் தான் என்றாலும் அதன் பெருமைகள் அவ்வளவாக மனதில் பதிந்ததில்லை .. அங்கு வெளி நாடுகளில் இருந்து இதை காணவே வரும் வெளிநாட்டவர் அதன் பெருமைகளை வியந்து போற்றுவதை பார்க்கும் போது நமக்கே வெட்கமாக தான் இருக்கிறது, வெளிநாடுகளில் இருக்கும் இடங்களை போற்றி பாராட்டும் நாம் நம் நாட்டின் கலை பொக்கிஷத்தை போற்ற மறந்து தான் விடுகிறோம்..பிள்ளைகளுக்கும் அதை சொல்வதை தவிர்த்து விடுகிறோம்...அக்காவும் அம்மாவும் சிவகாமியின் சபதம் கதையை விவரித்து எங்களுக்கு விவரம் சொல்லி கொண்டே வந்தனர்...எவ்வளவு அரிய கலை பொக்கிஷத்தை பெற்றிருக்கிறோம் நாம் ...காலம் கடந்தாலும் நம் தமிழர்களின் அரிய திறமையை நாமும் நம் பிள்ளைகளுக்கும் சொல்லி புரிய வைக்க வேண்டும் என நினைத்து கொண்டோம் ...
வியாழன், 30 அக்டோபர், 2014
புதன், 29 அக்டோபர், 2014
திங்கள், 13 அக்டோபர், 2014
நன்னம்பிக்கை முனை ....
நன்னம்பிக்கை முனை
cape of good hope
நாம் அனைவருமே அறிந்த வார்த்தை நன்னம்பிக்கை முனை ...சிறு வயது வரலாறு படத்தில் இதை படிக்காமல் நாம் கடந்து வந்து இருக்க முடியாது ...வாஸ்கோடகாமா என்னும் போர்த்துகீசிய மாலுமி இந்தியாவிற்கு பாதையை கண்டு பிடிக்கும் வழியில் இந்த இடத்தை கண்டு ,இது தான் இந்தியா என்று முதலில் நம்பினார் ..பின் அது தென்ஆப்ரிக்கா என்பதை அறிந்தார் ...இதற்கு முன் பலர் இந்தியாவை கண்டுபிடிக்க முயன்று தோல்வி அடைந்ததால் ,இவர் அடுத்த பயணத்தின் போது இங்கிருந்து தொடங்கி இந்தியாவை அடைந்து விடலாம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டதால் அந்த முனைக்கு நன்னம்பிக்கை முனை என பெயர் வைத்ததாக வரலாறு ....பழங்கால கல் படிகட்டுகள் .கலங்கரை விளக்கம் ,மூன்று புறமும் சூழ்ந்த கடல் .சில்லென்ற சீதோஷணம் அங்கு பயணிக்கும் அனைவருக்கும் வாழ்வில் இன்பத்தையும் நன்னம்பிக்கையும் அளிக்கும் முனை என்றே கூறலாம் ....தென் ஆப்ரிக்கா பயணத்தில் நான் மிகவும் ரசித்த ஒரு இடம் இது ....
செவ்வாய், 16 செப்டம்பர், 2014
சில புகைப்படங்களும் அதன் கதைகளும்
1.சவுத் ஆப்பிரிக்காவில்நைஸ்னா மற்றும் டிசிகாமா என்ற இரு ஊர்களும் தனி தனியாக இருந்தது அதனை இணைத்து இந்த பாலம் உருவாக்கிய பிறகு தான் இரண்டு ஊர்களும் இணைந்ததாம் ....
2.டிசிகாமா காடு பழம்பெரும் காடு ...ஆயிரகணக்கான வருடத்து மரங்கள் உள்ளது ....காட்டில்உள்ள 1000 வருடத்து மரம் இது ...அதை ஒரு சுற்றுலா தளமாக்கி உள்ளனர்..அடர்ந்து பரந்து விரிந்துள்ள இந்த மரத்தை பார்க்கவே வியப்பாக உள்ளது .. ..
3.பழமையான மரத்தின் விவரம் அடங்கிய பலகை ....
4.நகரத்து வாழ்வை மறந்துஅடர்ந்த காட்டினுள் தங்கி இருப்பது புதுவிதமான அனுபவம் ....காட்டினுள் மரத்தினால் ஆன சகல வசதிகளும் நிறைந்த அறைகள் அமைத்துள்ளனர் ..
5.இந்த மரவீட்டினில் என் மகள் ஐஷுவின் குறும்பு....
6.அப்பாவும் மகனும் பில்லியர்டசில் பிஸி .....
திங்கள், 25 ஆகஸ்ட், 2014
பயணங்களின் பதிவுகள் (வாகா எல்லை )
பயணங்களின் பதிவுகள் (வாகா எல்லை )
எல்லைகளை கடப்பதே ஒரு சிலிர்ப்பான அனுபவம் ...திருத்தணி கடந்து எல்லையில் வரும் கோபுர சின்னத்தை காணமல் கடப்பது இல்லை...எந்த எல்லை கோடுகளும் தாண்டுகையில் ஒரு அனுபவத்தை தரும் ...தாண்ட முடியவில்லை என்றாலும் பார்க்கையிலே சிலிப்பை தருகிறது வாகா எல்லை .....இந்தியா பாகிஸ்தான் எல்லைகளை இணைக்கும் வாகா எல்லை பஞ்சாப்பில் உள்ளது ...இந்த எல்லையில் தினமும் காலை கொடி ஏற்றுவதும் ,மாலை வேளையில் கொடி இறக்குவதும் இருபுறமும் திருவிழா போல் நடக்கிறது ..நாங்கள் சென்றது மாலை கொடி இறக்கும் பொழுது ...இருபுறமும் படி அமைத்து மக்கள் அமர்ந்து பார்க்க வசதி செய்து உள்ளனர் ..படி முழுவதும் மக்கள் கூட்டம்,நின்று கொண்டே பார்க்க வேண்டி இருந்தது ,அந்த புறமும் இதை போலவே படி அமைத்து உள்ளனர் ஆனால் அங்கு அவ்வளவு கூட்டம் இன்றி காலியாக இருந்தது..(இந்தியன் என்பதற்காக சொல்லவில்லை நிஜமாகவே அந்த புறம் கூட்டம் இல்லை) தேசபக்தி பாடல்கள் ஒளிபரப்பபடுகிறது ..ராணுவ வீரர்கள் மக்களை இணைத்து பாடவும் ஆடவும் உற்சாகப்படுத்துகின்றனர் ...நேரம் செல்ல செல்ல பாடலின் வேகமும் மக்களின் உற்சாகமும் அதிகரிக்கிறது ...தன்னை மறந்து மக்கள் ஆவேசத்துடன் வீரமுழக்கங்களை முழங்குகின்றனர்...பெண்கள் வயதை மறந்து மைதானத்தில் அந்த பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடுகின்றனர்...அது போலவே பாகிஸ்தான் வீரர்களும் அவர்கள் பாடல்களை இசைக்க விடுகின்றனர் ...இந்திய வீர்கள் அந்த பாடல்கள் நம் காதுகளில் விழாத வண்ணம் நம்மை உரத்த குரல்களில் பாட சொல்லி தூண்டுகின்றனர் ..மக்களும் வெறி வந்தவர்கள் போல் அதிகபட்ச தொனியில் பாடுகின்றனர்...தேசியக்கொடியை பிடித்து கொண்டு பெண்களும் சிறுமிகளும் நடை போடுகின்றனர்...எனது அம்மா அப்படி கொடி பிடித்து நடந்த போது எடுத்த புகைப்படத்தை மிக பெருமையாக காட்டுவார்....கொடி இறக்கும் நேரம் வந்ததும் வீரர்கள் அணிவகுத்து செல்கின்றனர் ..பாகிஸ்தான் வீர்களும் அது போலவே அணிவகுத்து வீர நடை போட்டு வருகின்றனர் ...இருவரும் நேருக்கு நேர் சந்தித்து , கால் முட்டி கழுத்து அருகில் தொடுவது போல் ஓங்கி மிதித்து சல்யூட் அடிக்கின்றனர் ...பார்க்கும் மக்கள் மிக உணர்ச்சி வசப்படும் வகையினில் இருக்கிறது ...இருபுறமும் ஒரே நேரத்தில் கொடி இறக்கப்பட்டு மடித்து ராணுவ மரியாதையுடன் கொண்டுவரப் படுகிறது ......அங்கிருந்து வெளி வரும் மக்களின் முகங்களில் பெருமிதமும் மனங்களில் வீரமும் தேசபக்தியும் நிறைந்து வருகின்றனர்.........வெளியில் கடைகளில் பாகிஸ்தான் ரூபாய் காசு ஆகியவை விற்கபடுகிறது .....ஞாபாகத்திற்காக சில நோட்டுகளை வாங்கி செல்கின்றனர்...கிரிக்கெட்டில் மட்டுமே தேசபக்தி காணும் நாம் ஒருமுறை இந்த எல்லை வைபவத்தை கண்டு வந்தால் அதை நினைக்கும் போதெல்லாம் தேசபக்தி பெறகும்....
......
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











