திங்கள், 29 நவம்பர், 2010

அணில் பிள்ளை

ராமர் போல் அவதாரமாய் இருந்திருந்தால்
இலங்கை அசுரர்களை அழித்திருப்போம் .....
அனுமன் போல் பலமிருந்திருந்தால்
இலங்கைக்கு தீ இட்டு இருப்போம் ...
ஓடி வந்து உதவிட மனமிருந்தும்
இயலாமையால் தவிக்கிறோம் ....
காலம் கனியும் பொழுதினில்
அவதாரமாய்,பலவானாய்..
உதவ இயலாவிட்டாலும்
நிச்சயம் துரும்பெடுத்து போடுவோம்
அணில் பிள்ளை போல் .................

2 கருத்துகள்:

 1. அருமையான கவிதை சகோதரி

  //
  இயலாமையால் தவிக்கிறோம் ....
  காலம் கனியும் பொழுதினில்
  அவதாரமாய்,பலவானாய்..
  உதவ இயலாவிட்டாலும்
  நிச்சயம் துரும்பெடுத்து போடுவோம்
  அணில் பிள்ளை போல் .......
  //
  நம் பலமிலந்திருந்தாலும் போராடுவோம் என்று உறுதியாய் நிற்கிறீர்கள்

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு