![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBMN_qCvfOlu8k2kBu2ScugAKQP0cuCX-cNuJjJO3dccGKQVZ5vZ_nWegJDwd2zxB6vNR0qvfxV22E3kCC9S8JnS2ryDLqpL7C7RP0KEkNqaCTvArYN3NlE60EgxfS8WkeOAmwtsKC7Vc/s200/Lady_Masacerade_2.jpg)
அதிகாலை எழுந்து
வீட்டு வேலைகளை முடித்து
பிள்ளைகளையும் கணவரையும்
கவனித்து அனுப்பி
மாமியாருக்கும் மாமனாருக்கும்
சமைத்து வைத்து
அலுவலகம் சென்று
நாள் முழுவதும் உழைத்து களைத்து
வீடு திரும்பியதும்
மாமியாரின் குத்தல் பேச்சுகளுக்கு
மறுமொழி கூறாமல் மௌனித்து
மாமனாரின் அதிகாரங்களுக்கு
அடிபணிந்து அடங்கி
கணவரிடம் வேண்டி கெஞ்சி
அனுமதி பெற்று
சமைத்து முடித்து கிளம்பி போகிறாள்
மகளிர் தின பட்டிமன்றத்தில்
மேடை ஏறி பெண் விடுதலை
பற்றி முழக்கமிட .........
Nice one with Anti Climax
பதிலளிநீக்குwishes to u
vijay
உண்மை நிலவரம் இது தான் . வாழ்த்துக்கள் ..உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் ..:)
பதிலளிநீக்குகவிதை அருமை.மகளிர் தின வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி திரு விஜய் சார் ......
பதிலளிநீக்குமிக்க நன்றி சுதர்ஷன் ......
பதிலளிநீக்குநன்றி ஆயிஷா ...
பதிலளிநீக்கு>>>மகளிர் தின பட்டிமன்றத்தில்
பதிலளிநீக்குமேடை ஏறி பெண் விடுதலை
பற்றி முழக்கமிட .........
ஹா ஹா காமெடி டச்