வியாழன், 24 மார்ச், 2011

எல்லை கோடு


ஒவ்வொரு கல்லாக அடுக்கி
கட்டவில்லை உன்மேல்
எனது காதல் கோட்டையை
ஒவ்வொரு கல்லாக உருவி
தகர்த்தாய் என் இரும்பு மனதை.....

கடந்து போன யாரிடமும்
கொண்டதில்லை இந்த மயக்கம்
உன்னை கடந்து போக இயலவில்லை
பெண் மனதிலே கலக்கம் ....

தொண்டை குழியின் உள்ளே
போக இயலாதவாறு உணவையும்
இமைகளின் உள்ளே நுழைய
விடாமல் உறக்கத்தையும் கெடுத்தாய் ....

எல்லைகள் தாண்டாமல்
இருக்க பழகியவள் தான்
இன்று வேண்டுகிறேன் என்
எல்லை நீயாக இருக்க வேண்டுமென.......

8 கருத்துகள்:

 1. >>தகர்தாய் என் இரும்பு மனதை....

  தகர்த்தாய்

  பதிலளிநீக்கு
 2. கவிதைகள் ஃபினிஷிங்க் டச்சில் அழகு பெறுகின்றன... லேட்டஸ்ட் உதா...>>>எல்லைகள் தாண்டாமல்
  இருக்க பழகியவள் தான்
  இன்று வேண்டுகிறேன் என்
  எல்லை நீயாக இருக்க வேண்டுமென.......

  பதிலளிநீக்கு
 3. நன்றி செந்தில்குமார் சார் .....தவறுகளை திருத்தி கொள்கிறேன் ...தொடர்ந்து விமர்சியுங்கள் ....சுஜா

  பதிலளிநீக்கு
 4. இமைகள் நுழைய விடாத உறக்கம் மிக அழகு

  மேலும் மேலும் மெருகேறுகிறது உங்கள் கவிதைகள்

  வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 5. நன்றி விஜய் ....உங்கள் விமர்சங்கள் தான் என் கவிதை மெருகேற காரணம் ....தொடர்ந்து விமர்சியுங்கள் .....

  பதிலளிநீக்கு
 6. இமைகள் நுழைய விடாத உறக்கம் மிக அழகு

  பதிலளிநீக்கு