வெள்ளி, 18 நவம்பர், 2011

எண்ணிப் பார்க்கிறேன்

எண்ணிப் பார்க்கிறேன்
என்று தோன்றியது உன்மீதான
என் ஆழமான நேசத்தின் வேர்...?

பருவ வயதினில் நான் மோகித்த
என் கதாநாயகனின் சாயலை நீ
கொண்டதாலா.....?

என் ஆசைகளை உன் ஆசையாய்
எண்ணி நிறைவேற்றுவதாலா....?

வாழ்வின் இன்பங்களை எல்லாம்
எனக்களிக்க வேண்டும் என்கிற
உன் எண்ணத்தினாலா ....?

அனைத்திலும் மேலாய்
பழகிய சில நாட்களில்
உன் கரம் பற்றி பாதுகாப்பாய்
பாதை கடந்த ஒரு மாலைபொழுதினில்
என் தந்தை கரத்தின் கதகதப்பும்
பாதுகாப்பும் உன் கரங்களில்
கண்ட நாள் முதலாய் வேர் விட்டது
இந்த நேசம்..........

6 கருத்துகள்:

 1. >>பருவ வயதினில் நான் மோகித்த
  என் கதாநாயகனின் சாயலை நீ
  கொண்டதாலா.....?

  யாரு? பவர் ஸ்டார் சீனிவாசனா?

  பதிலளிநீக்கு
 2. >உன் கரம் பற்றி பாதுகாப்பாய்
  பாதை கடந்த ஒரு மாலைபொழுதினில்
  என் தந்தை கரத்தின் கதகதப்பும்

  அபியும் நானும் படம் போல!!!

  பதிலளிநீக்கு
 3. பெரும்பாலும் தந்தையை பார்த்து வளரும் பெண்ணின் மனதை அருமையாய் சொல்லியுள்ளீர்.

  பதிலளிநீக்கு