வியாழன், 29 டிசம்பர், 2011

குமரியின் குமுறல்

குழந்தையாய் இருந்த நான்
குமரி ஆனேன் நேற்று ....
நேற்று வரை எனக்கும்
எனது தோழனுக்கும் இருந்த உறவு
இன்று ஆனது தப்பாய் ....
இதுவரை எங்களது பார்வையில்
அன்பும் சந்தோஷமும் கண்டவர்கள்
இன்று அதை காதல் என்கிறார்கள் ...
நேற்றுவரை எங்களது சிரிப்பை
உல்லாசம் குழந்தை தனம் என்றவர்கள்
இன்று கள்ளத்தனம் பல்லிளிப்பு என்கிறார்கள் ....
நேற்று வரை எங்களது கைகோர்பில்
வெள்ளந்தி தனமும் நட்பும் பார்த்தவர்கள்
இன்று அதை காமம் என்கிறார்கள் ....
குற்றம் எங்கள் மீதல்ல
இன்னமும் நாங்களே கடந்திராத எங்களது பால்யத்தை
நீங்கள் கடந்தது தான் குற்றம் .......

7 கருத்துகள்:

 1. பழைய டைரியில் தூசு தட்டப்பட்ட புதிய நினைவுகள்

  பதிலளிநீக்கு
 2. >>இன்னமும் நாங்களே கடந்திராத எங்களது பால்யத்தை
  நீங்கள் கடந்தது தான் குற்றம் .

  அடிக்கடி பஞ்சு மிட்டாய், லாலிபாப் சாப்பிடறதா கவிதை வந்தப்பவே நினைச்சேன்:))

  பதிலளிநீக்கு
 3. உண்மைதான், ஆயினும் அந்த இளமை ஒரு தேடலை தொடர்ந்து கொண்டே இருக்கும். தேடல் திசை மாறாமல் பார்த்துக் கொள்வதுதான் பெரியோர் செயல் ஆனால் குற்றம் சுமத்தி குற்றவாளி கூண்டில் ஏற்றுவதால் காயப்படுவது மட்டுமல்ல சிலர் மொட்டிலே பழமாகி பழுதாகி போகின்றனர்.

  பதிலளிநீக்கு
 4. அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

  என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

  பதிலளிநீக்கு