இருள் சூழ்ந்த குழியின் உள்ளிருந்து அண்ணாந்து தேடுகிறேன் இழையாய் வருகிறது நம்பிக்கை என்னும் ஒளி கயிறாக இல்லையென கலங்கி நிற்காமல் இழை பற்றி ஏறுகிறேன் என்றேனும் ஒருநாள் ஒளி பிறக்குமென .....
என் பலவீனங்கள் எல்லாம் உனக்கு பலம் ... என் குற்றங்கள் எல்லாம் உனக்கு சாதகம்.... என் வீழ்ச்சிகள் எல்லாம் உன் உயர்வு .... எப்போதும் என்னையே உற்று நோக்கும் உன் பார்வையால் எனக்கு சங்கடங்கள் ஏதுமில்லை... பலவீனங்களும் குற்றங்களும் வீழ்சிகளும் இல்லாமல் என்னை பயணப்பட வைக்கிறது உனது பார்வை .....
உன்னை நினைக்க எனக்குள் ஆயிரம் காரணங்கள் என்னை மறக்க உனக்குள் ஆயிரம் காரணங்கள் ... அழியாத நினைவு சின்னங்கள் என நீ கொடுத்த பரிசு பொருட்கள் எல்லாம் அழிந்தன காலப்போக்கில் ... அழித்து விடு என நீ சொன்ன உன் நினைவுகள் மட்டும் அழியவில்லை இன்றுவரை ...
இதய வாசலை மூடி விட்டதால் என்னை நுழைய விடாமல் தடுக்கலாம் என்று நினைக்காதே..... உன் இதய வாசல் வழியே வந்து செல்லும் நினைவலைகள் அல்ல நான்..... உன் இதயத்தை துடிக்க வைக்கும் துடிப்பலைகள் நான்......