சனி, 11 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா சிறப்பு பதிவு 1(OCTOBER 3/2016)
TIME TRAVEL

எங்கள் திருமண வாழ்வில் வெள்ளிவிழா ஆண்டு இது...இந்த கால் நூற்றாண்டில் என்வாழ்வில் நடந்த சில சுவாரசியங்களை பதிவாக்கலாம் என்று நினைக்கிறேன்....

1990 ஆம் ஆண்டு .....அந்த தெருவில் நாங்கள் வீடு கட்டி வந்த அந்த நாளில் இருந்து பலர் சொல்லியது இந்த இடம் ரௌடிகள் அதிகமான இடம் என்று...அன்று அவர்கள் சொன்ன ரௌடிகளுக்கு எல்லாம் தலைவன் என்று அறியப்பட்ட தாமு பின்னாளில் என்பின்னே சுற்றுவார் என்றோ அவரின் ஹீரோயிசத்தில் மயங்கி நானும் சம்மதிப்பேன் என்று நினைக்கவில்லை.......புதிய பாதை படம் வந்த புதிது அது...அதன் தாக்கத்தில் அவர் kk நகர் சரவணபவனில் என்னிடம் காதலை சொன்னதும் மறுக்காமல் சம்மதித்தேன்....25 வருடத்திற்கு முன்பு காதலிக்க ஆரம்பித்த அந்தமனிதனும் மனிதியும் இவர்கள் தான்.......தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.

சனி, 4 பிப்ரவரி, 2017

பயணங்களின் பதிவுகள் தேனி மாவட்டம்  (மேகமலை)








    மேகமலை..... வெகுநாட்களாக  போக விரும்பிய ஒரு இடம்...அழகிய தேயிலை தோட்டங்களும் ,ஏலக்காய்அ தோட்டங்களும் ,அணைகளும்  ,முகத்தை வருடும் மேககூட்டமும் சில்லென்ற இயற்கை பிரதேசத்தை கனவு கொண்டு சென்ற எங்களுக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது ,,,மலை அடிவாரம் வரை புதிய ரோடு அழகாக இருந்தது ,,,வனகாவலரும் ஒன்றும் கூறாமல் அனுப்பினார்....மலைபாதை குண்டும்குழியுமாக  27கிலோமீட்டர் தூரத்தை  4 மணி நேரமாக  கடந்தோம் ...

     பாதை போடும் பொருட்டு  வழிநெடுக வெடி வைத்து வெடிப்பதால் புழுதியும் அனலுமாக இருந்தது ....மேலே சென்று  சேர்வதற்குள் சோர்ந்து போனோம் ...மேலே சென்றதும் ஹைவேஸ் என்கிற இடத்தை அடைந்ததும் அனல்  குறைந்து சற்று குளிர் உணர்ந்தோம்...பச்சை படுகையென விரிந்திருந்த தேயிலை தோட்டங்கள் சிறிய பள்ளத்தாக்கில் ஓடும் நீர் ... வீடு போன்ற மெஸ்,,,,குறைவான விலையில் சாப்பாடு என  அந்த இடத்தில உற்சாகமாக சில பொழுதுகளை கழித்தோம் .....
     
   சில இடங்கள் நேரில் பார்பதை விட கற்பனையிலேயே மிக அழகாக இருக்கும் என்பதை பார்த்து அனுபவித்து தெரிந்து கொண்ட இடம் ....


    

செவ்வாய், 31 ஜனவரி, 2017

பயணங்களின் பதிவுகள் (வைகை அணை )
பயணம் சென்று வெகு நாட்கள் ஆகி விட்டது...பிள்ளைகளின் படிப்பை பொருட்டு செல்ல முடியவில்லை...எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் அங்கு பார்க்க வேண்டிய இடங்களை பற்றி தெரிந்து கொண்டு போவது என் பழக்கம்...முன்பெல்லாம் லைப்ரரி சென்று பயண புத்தகம் படித்து குறிப்பெடுத்து கொண்டு போவேன்...இப்போது செல்போன் அதை எளிமையாக்கி விட்டது ...
ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள ஆண்டிப்பட்டி செல்ல வேண்டியிருந்ததால் ஒரு சின்ன டூர் பிளான் பண்ணினோம் ...அருகில் உள்ள இடங்களில் முதலில் பார்த்தது வைகை அணை....மதுரை திண்டுக்கல் மாவட்டத்துக்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவை தீர்க்க மிக அழகுடன் நீர்நிறைந்து இருக்கும் இந்த அணை இப்போது நீர்மட்டம் வெகு குறைந்து சிறிதளவே நீர் இருந்தது.....காய்ந்து கிடந்த அணையை பார்க்கும் போது இன்னும் அடுத்த மழை வரும் வரை தண்ணீர் பற்றாக்குறையை எப்படி சமாளிக்க போகிறோமோ என்கிற அச்சத்தை உண்டாக்கியது மனதில் ..... இதற்கு நம்மால் செய்ய முடிந்த ஒரே செயல் முடிந்த அளவு நீரை சிக்கனமாக செலவழிப்போம் ...நீர் வளம் காப்போம் .
நீ பார்த்த பார்வைகொரு நன்றி 

வியாழன், 26 ஜனவரி, 2017

பயணங்களின் பதிவுகள் (வைகை அணை  )
    பயணம் சென்று வெகு நாட்கள் ஆகி விட்டது...பிள்ளைகளின் படிப்பை பொருட்டு செல்ல முடியவில்லை...எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் அங்கு பார்க்க வேண்டிய இடங்களை பற்றி தெரிந்து கொண்டு போவது என் பழக்கம்...முன்பெல்லாம் லைப்ரரி சென்று பயண புத்தகம் படித்து குறிப்பெடுத்து கொண்டு போவேன்...இப்போது செல்போன் அதை எளிமையாக்கி விட்டது ...
    ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள ஆண்டிப்பட்டி செல்ல வேண்டியிருந்ததால் ஒரு சின்ன டூர் பிளான் பண்ணினோம் ...அருகில் உள்ள இடங்களில் முதலில் பார்த்தது வைகை அணை....மதுரை திண்டுக்கல் மாவட்டத்துக்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவை தீர்க்க  மிக அழகுடன் நீர்நிறைந்து இருக்கும் இந்த  அணை  இப்போது நீர்மட்டம் வெகு குறைந்து சிறிதளவே நீர் இருந்தது.....காய்ந்து கிடந்த அணையை பார்க்கும் போது இன்னும் அடுத்த மழை வரும் வரை தண்ணீர் பற்றாக்குறையை எப்படி சமாளிக்க  போகிறோமோ என்கிற அச்சத்தை உண்டாக்கியது  மனதில் .....

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

        வாழ்வில் எதற்காகவும் இதுவரை  கொடி பிடித்ததோ கோஷம் போட்டதோ இல்லை...போரட்டகளம் என்பதை  தொலைகாட்சியில் வேடிக்கை பார்த்து, நாட்டில் நடக்கும் அவலங்களையும் அராஜகங்களையும் விமர்சிப்பதோடு என்னால் என்ன செய்ய முடியும் என்கிற இயலாமையோடு கடந்து செல்லும் என்னையும் இந்த போராட்ட களத்தில் இறங்கி கோஷம் போட வைத்தது எதுவென்றால் ,..... இளைய சமுதாயமே  ...

       தாங்கள் இறங்கியதோடு மட்டுமில்லாமல் எங்களையும் கைப்பிடித்து அழைத்து வந்து உங்களாலும் முடியும் என்கிற நம்பிக்கையை எங்களுக்குள் விதைத்துள்ளனர்  இந்த மாணவ செல்வங்கள் .....இது வரை ஓட்டு போடுவது மட்டும் தான் எங்கள் கடமை என இருந்த எங்கள் மனதில் இதுவும் உங்கள் கடமை...நம் உரிமைகளை அறவழியில் போராடி பெற முடியும் என்கிற மிக பெரிய நம்பிக்கையை எங்கள் மனதில் ஊட்டிய நீங்கள் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையாக்கள் ........

     முக்கியமாக சென்னை பிள்ளைகள் சமுதாய பொறுப்பற்றவர்கள் என்கிற அவபெயரை முழுவதும் துடைதெறிந்து எல்லோருக்கும் முன்னுதாரணமாய் நின்று எங்களை  தலைநிமிர்ந்து நிற்க வைத்து விட்டீர்கள் ....

      இனிவரும் காலங்களிலும் சமூக அவலங்களை எதிர்த்து  போராடும்   உங்களின் பின்னால் என்றும் நாங்கள்  துணை நிற்போம்  .....
     
    

செவ்வாய், 3 ஜனவரி, 2017

கோடிட்ட இடங்கள்......

வாழ்கை சில வேளைகளில்
வெறுமையென சில கோடுகளை
இட்டு செல்கையில்

கோடிட்ட இடங்களை
சுவாரசியம் கொண்டு நிரப்புகிறது
உன்னை பற்றிய நினைவுகள் .......