வெள்ளிவிழா சிறப்பு பதிவு 3(october 3)
— remembering someone very special with Saidai Damu.TIME TRAVEL 1992 ...பாரதிராஜாவின் படத்தின் இறுதி காட்சி போல வாழ்க்கை காதலர்கள் இணைவதில் முடிவதவதில்லை... அன்றில் இருந்து தான் தொடங்குகிறது வாழ்க்கை.... இதுவரை சம்பாதிக்க அவசியபடாத ஒருவனும் இதுவரை சமையலறையை பார்த்திராத ஒருத்தியும் திருமணம் முடித்தால் வாழ்கை எப்படி இனிக்கும்...இருவருக்கும் கசப்பான அனுபவங்களும் திடீர் திருமணம் தந்த மனஉளைச்சலும் ஒருவித வெறுப்பான வாழ்வையே தந்தது...எங்க வீட்டில் எங்கள் திருமணத்தை ஏற்று கொண்டனர்...அந்த வருடம் ஜூலை மாதம் என் மகன் பிறந்தபின்பே எங்கள் வாழ்வில் பிடிப்பும் சந்தோஷமும் தொடங்கியது....ஆட்டோ ஓட்டுனராக தொடங்கிய வாழ்க்கையில் மகனின் வருகை மிக பெரிய விருப்பங்களையும் லட்சியங்களையும் சேர்த்தே கொண்டு வந்தது....மகனுகேன்றே அவர் ஆர்வமுடன் சம்பாதிக்கவும் நான் மகிழ்ச்சியுடன் சமைக்கவும் ஆரம்பித்தேன்....தொடரும் |
சனி, 11 பிப்ரவரி, 2017
வெள்ளிவிழா சிறப்பு பதிவு 2 (october 3/2016)
TIME TRAVEL
1991 ஆம் ஆண்டு..கல்யாண கனவு காணும் முன்பே கல்யாணம் ...
அப்போது 19 வயது எனக்கு...அவர்க்கு 26....கோபகுணம் கொண்ட அவரின் பேச்சை மீறி எனது அக்காவுடன் சினிமாக்கு கிளம்பி செல்லும் போது கோபத்தில் பிரிதிவிராஜ் சம்யுக்தையை கடத்தியது போல என்னை ஆட்டோவில் கடத்திகொண்டு சென்றார் அவர்...
என் அப்பாவும் தம்பியும் ஒரு வண்டியில் துரத்தி கொண்டு வர,,,அவர் அண்ணன் ஒரு பக்கம் துரத்தி வர இவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி கொண்டு சென்றது இன்று நினைத்தாலும் நம்ப முடியாத தருணங்கள்....
ஆட்டோவை பல்லாவரத்தில் விட்டு விட்டு அங்கிருந்து பஸ் ஏறி சூணாம்பேடு என்கிறஇடத்தில இருந்த அவரது நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்றார்... அன்று இரவே திருமண ஏற்பாடு செய்து மறுநாள் காலை ரெஜிஸ்ட்டர் ஆபீசில் 5 ரூபாய் கட்டி நடந்தது ரெஜிஸ்டர் .. அருகில் இருந்த ஒரு சிறிய கோவிலில் நண்பர்கள் இருவர் முன்னிலையில் மாலை மாற்றி தாலி கட்டி நடந்தது எங்கள் திருமணம்.....சென்னையில் எங்களை தேடிய போலீஸ் அவர் நண்பர்களை பிடித்து அடித்த கதையை இன்றும் அவர் நண்பர்கள் சொல்லி சிரிப்பார்கள்....சென்னை திரும்பிய எங்களை பிடித்த போலீஸ் DC இவர் கட்டிய தாலியை கழற்றி கொடுக்கும்படி என்னை மிரட்டியதும் ,,,பின்னர் வாழ்வில்நல்ல நிலையில் எங்களை பார்த்தது அவரே எங்களை பாராட்டியதும் என்றும் நினைவில் இருந்து அகலாத சித்திரங்கள்.....
— remembering someone very special with Saidai Damu.TIME TRAVEL

வெள்ளிவிழா சிறப்பு பதிவு 1(OCTOBER 3/2016)
— remembering someone very special with Saidai Damu.TIME TRAVEL எங்கள் திருமண வாழ்வில் வெள்ளிவிழா ஆண்டு இது...இந்த கால் நூற்றாண்டில் என்வாழ்வில் நடந்த சில சுவாரசியங்களை பதிவாக்கலாம் என்று நினைக்கிறேன்.... 1990 ஆம் ஆண்டு .....அந்த தெருவில் நாங்கள் வீடு கட்டி வந்த அந்த நாளில் இருந்து பலர் சொல்லியது இந்த இடம் ரௌடிகள் அதிகமான இடம் என்று...அன்று அவர்கள் சொன்ன ரௌடிகளுக்கு எல்லாம் தலைவன் என்று அறியப்பட்ட தாமு பின்னாளில் என்பின்னே சுற்றுவார் என்றோ அவரின் ஹீரோயிசத்தில் மயங்கி நானும் சம்மதிப்பேன் என்று நினைக்கவில்லை.......புதிய பாதை படம் வந்த புதிது அது...அதன் தாக்கத்தில் அவர் kk நகர் சரவணபவனில் என்னிடம் காதலை சொன்னதும் மறுக்காமல் சம்மதித்தேன்....25 வருடத்திற்கு முன்பு காதலிக்க ஆரம்பித்த அந்தமனிதனும் மனிதியும் இவர்கள் தான்.......தொடரும் |
சனி, 4 பிப்ரவரி, 2017
பயணங்களின் பதிவுகள் தேனி மாவட்டம் (மேகமலை)
மேகமலை..... வெகுநாட்களாக போக விரும்பிய ஒரு இடம்...அழகிய தேயிலை தோட்டங்களும் ,ஏலக்காய்அ தோட்டங்களும் ,அணைகளும் ,முகத்தை வருடும் மேககூட்டமும் சில்லென்ற இயற்கை பிரதேசத்தை கனவு கொண்டு சென்ற எங்களுக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது ,,,மலை அடிவாரம் வரை புதிய ரோடு அழகாக இருந்தது ,,,வனகாவலரும் ஒன்றும் கூறாமல் அனுப்பினார்....மலைபாதை குண்டும்குழியுமாக 27கிலோமீட்டர் தூரத்தை 4 மணி நேரமாக கடந்தோம் ...
பாதை போடும் பொருட்டு வழிநெடுக வெடி வைத்து வெடிப்பதால் புழுதியும் அனலுமாக இருந்தது ....மேலே சென்று சேர்வதற்குள் சோர்ந்து போனோம் ...மேலே சென்றதும் ஹைவேஸ் என்கிற இடத்தை அடைந்ததும் அனல் குறைந்து சற்று குளிர் உணர்ந்தோம்...பச்சை படுகையென விரிந்திருந்த தேயிலை தோட்டங்கள் சிறிய பள்ளத்தாக்கில் ஓடும் நீர் ... வீடு போன்ற மெஸ்,,,,குறைவான விலையில் சாப்பாடு என அந்த இடத்தில உற்சாகமாக சில பொழுதுகளை கழித்தோம் .....
சில இடங்கள் நேரில் பார்பதை விட கற்பனையிலேயே மிக அழகாக இருக்கும் என்பதை பார்த்து அனுபவித்து தெரிந்து கொண்ட இடம் ....

செவ்வாய், 31 ஜனவரி, 2017
பயணங்களின் பதிவுகள் (வைகை அணை )
பயணம் சென்று வெகு நாட்கள் ஆகி விட்டது...பிள்ளைகளின் படிப்பை பொருட்டு செல்ல முடியவில்லை...எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் அங்கு பார்க்க வேண்டிய இடங்களை பற்றி தெரிந்து கொண்டு போவது என் பழக்கம்...முன்பெல்லாம் லைப்ரரி சென்று பயண புத்தகம் படித்து குறிப்பெடுத்து கொண்டு போவேன்...இப்போது செல்போன் அதை எளிமையாக்கி விட்டது ...
ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள ஆண்டிப்பட்டி செல்ல வேண்டியிருந்ததால் ஒரு சின்ன டூர் பிளான் பண்ணினோம் ...அருகில் உள்ள இடங்களில் முதலில் பார்த்தது வைகை அணை....மதுரை திண்டுக்கல் மாவட்டத்துக்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவை தீர்க்க மிக அழகுடன் நீர்நிறைந்து இருக்கும் இந்த அணை இப்போது நீர்மட்டம் வெகு குறைந்து சிறிதளவே நீர் இருந்தது.....காய்ந்து கிடந்த அணையை பார்க்கும் போது இன்னும் அடுத்த மழை வரும் வரை தண்ணீர் பற்றாக்குறையை எப்படி சமாளிக்க போகிறோமோ என்கிற அச்சத்தை உண்டாக்கியது மனதில் ..... இதற்கு நம்மால் செய்ய முடிந்த ஒரே செயல் முடிந்த அளவு நீரை சிக்கனமாக செலவழிப்போம் ...நீர் வளம் காப்போம் .

வியாழன், 26 ஜனவரி, 2017
பயணங்களின் பதிவுகள் (வைகை அணை )
பயணம் சென்று வெகு நாட்கள் ஆகி விட்டது...பிள்ளைகளின் படிப்பை பொருட்டு செல்ல முடியவில்லை...எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் அங்கு பார்க்க வேண்டிய இடங்களை பற்றி தெரிந்து கொண்டு போவது என் பழக்கம்...முன்பெல்லாம் லைப்ரரி சென்று பயண புத்தகம் படித்து குறிப்பெடுத்து கொண்டு போவேன்...இப்போது செல்போன் அதை எளிமையாக்கி விட்டது ...
ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள ஆண்டிப்பட்டி செல்ல வேண்டியிருந்ததால் ஒரு சின்ன டூர் பிளான் பண்ணினோம் ...அருகில் உள்ள இடங்களில் முதலில் பார்த்தது வைகை அணை....மதுரை திண்டுக்கல் மாவட்டத்துக்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவை தீர்க்க மிக அழகுடன் நீர்நிறைந்து இருக்கும் இந்த அணை இப்போது நீர்மட்டம் வெகு குறைந்து சிறிதளவே நீர் இருந்தது.....காய்ந்து கிடந்த அணையை பார்க்கும் போது இன்னும் அடுத்த மழை வரும் வரை தண்ணீர் பற்றாக்குறையை எப்படி சமாளிக்க போகிறோமோ என்கிற அச்சத்தை உண்டாக்கியது மனதில் .....

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)