சனி, 11 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா (october 3/2016


) சிறப்பு பதிவு 7
TIME TRAVEL

1996.....என் படிப்பை படித்து கொண்திருந்த நேரத்தில் மகனை பெரிய பள்ளியில் சேர்க்க அவர் ஆசைப்பட்டார்... ஆஷ்ரம் பள்ளியில் கொண்டு சேர்த்தோம்...பிரபலங்கள் படிக்கும் பள்ளியில் அவனும் சேர்ந்து படிக்க ஆரம்பித்தான் .....அப்போது தான் அப்பள்ளி புதியதாய் தொடங்கியிருந்தார்கள்....

அப்போதெல்லாம் ஒரு வியாபாரம் தொடங்கினால் அதற்கு அவ்வளவு பெரிய போட்டிகள் எல்லாம் கிடையாது....நகரில் வீடுகள் அதிகமாகி கொண்டிருந்தநேரம் அது... ஆகையால் சிமெண்ட் மணல் ஜல்லி விற்பனை வெற்றிகரமாக நடந்தது....கூடவே தீபாவளி நேரத்தில் பட்டாசு விற்பனையும் செய்ய ஆரம்பித்தார்....சிவகாசியில் இருந்து மொத்தமாக வாங்கி மிக பெரிய அளவில் அவரது கடை வாசலில் பட்டாசு வியாபாரம் நடத்துவார்... மகன் மேல் உள்ள பிரியத்தினாலேயே ,மகனை செல்வாக்காய் வளர்க்க வேண்டியதின் பொருட்டே பணத்தின் பின்னே ஓடத் தொடங்கினார்....
 — remembering someone very special with Saidai Damu.
வெள்ளிவிழா (october 3/2016

) சிறப்பு பதிவு 6
TIME TRAVEL
 1995.....வியாபாரம் மிக அருமையாக சென்று கொண்டிருந்தாலும் அவர் முகத்தில் சிறுசோகம் படர்ந்து கொண்டே இருக்கும்...காதல் மனைவியை விட்டு அவர்மட்டும் அவரது அம்மா வீட்டுக்கு சென்று வருவது அவர்க்கு ஒரு மனக்குறையை தந்து கொண்டே இருந்தது ...அதற்கும் ஒருநாள் விடிவு வந்தது....ஒரு நாள் ஒருவிழாவில் இருந்து சேர்ந்து திரும்பும் போது அவரது அண்ணன் நேராக அவர்கள் வீட்டிற்கே அழைத்து சென்றார்....என் மாமனார் மாமியாரும் மற்றவர்களும் என்னை முழுமனதுடன் ஏற்று கொண்டே பிறகே அவரது திருமணவாழ்வு அவருக்கு முழு நிறைவை தந்தது.....

பள்ளி படிப்பை முடிக்காத அவர் நான் டிகிரி படிக்க வேண்டும் என்பதற்காக மெட்ராஸ் யூனிவெர்சிட்டி யில் b.com படிப்பதற்காக சேர்த்து விட்டார்...மகனும் அவரும் நான் வகுப்பில் இருக்கும் போது வெளியில் வந்து காவல் இருக்கும் நிமிடங்கள் இன்றும் கண்ணில் நிற்கிறது.....
 — remembering someone very special with Saidai Damu.
வெள்ளிவிழா சிறப்பு பதிவு 5(october 3/2016)
TIME TRAVEL

1994.....தெருவில் எல்லோரையும் மயக்கிய அழகு பேரனை கண்டு அவர் அம்மாவும் அப்பாவும் மயங்கி போயினர்....நாம் கொண்டாட வேண்டிய பேரனை ஊர் கொண்டாடுவதா என்று கோபம் களைந்து மகனையும் பேரனையும் வீட்டுக்கு அழைத்தனர்....என்னை சேர்த்து கொள்ள அவர்களுக்கு காலஅவகாசம் தேவைப்பட்டது....ஏனென்றால் காதல் அவர்களுக்கு புதிது...என் அம்மாவும் அப்பாவும் காதல் திருமணம் என்பதால் அவர்கள் எங்களை புரிந்து கொண்டு உடனே ஏற்றுகொண்டனர்...

இதற்கிடையில் இவர் நண்பர்கள் இருவரின் துணையுடன் சொந்தமாக கடை தொடங்க முயற்சித்தார்....சிறிய அளவில் முதலீடு செய்து மூவரும் சேர்ந்து ஒரு சிமெண்ட்கடை நடத்த தொடங்கினர்....அப்ப்போதெல்லாம் அவ்வளவு கடைகள் இல்லாததால் வியாபாரம் மிக சுறுசுறுப்பாக நடக்க ஆரம்பித்தது.....
 — with Saidai Damu.


வெள்ளிவிழா சிறப்பு பதிவு 3(october 3)
TIME TRAVEL

1992 ...பாரதிராஜாவின் படத்தின் இறுதி காட்சி போல வாழ்க்கை காதலர்கள் இணைவதில் முடிவதவதில்லை... அன்றில் இருந்து தான் தொடங்குகிறது வாழ்க்கை....

இதுவரை சம்பாதிக்க அவசியபடாத ஒருவனும் இதுவரை சமையலறையை பார்த்திராத ஒருத்தியும் திருமணம் முடித்தால் வாழ்கை எப்படி இனிக்கும்...இருவருக்கும் கசப்பான அனுபவங்களும் திடீர் திருமணம் தந்த மனஉளைச்சலும் ஒருவித வெறுப்பான வாழ்வையே தந்தது...எங்க வீட்டில் எங்கள் திருமணத்தை ஏற்று கொண்டனர்...அந்த வருடம் ஜூலை மாதம் என் மகன் பிறந்தபின்பே எங்கள் வாழ்வில் பிடிப்பும் சந்தோஷமும் தொடங்கியது....ஆட்டோ ஓட்டுனராக தொடங்கிய வாழ்க்கையில் மகனின் வருகை மிக பெரிய விருப்பங்களையும் லட்சியங்களையும் சேர்த்தே கொண்டு வந்தது....மகனுகேன்றே அவர் ஆர்வமுடன் சம்பாதிக்கவும் நான் மகிழ்ச்சியுடன் சமைக்கவும் ஆரம்பித்தேன்....தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.

வெள்ளிவிழா சிறப்பு பதிவு 2 (october 3/2016)
TIME TRAVEL

1991 ஆம் ஆண்டு..கல்யாண கனவு காணும் முன்பே கல்யாணம் ...

அப்போது 19 வயது எனக்கு...அவர்க்கு 26....கோபகுணம் கொண்ட அவரின் பேச்சை மீறி எனது அக்காவுடன் சினிமாக்கு கிளம்பி செல்லும் போது கோபத்தில் பிரிதிவிராஜ் சம்யுக்தையை கடத்தியது போல என்னை ஆட்டோவில் கடத்திகொண்டு சென்றார் அவர்...
என் அப்பாவும் தம்பியும் ஒரு வண்டியில் துரத்தி கொண்டு வர,,,அவர் அண்ணன் ஒரு பக்கம் துரத்தி வர இவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி கொண்டு சென்றது இன்று நினைத்தாலும் நம்ப முடியாத தருணங்கள்....

ஆட்டோவை பல்லாவரத்தில் விட்டு விட்டு அங்கிருந்து பஸ் ஏறி சூணாம்பேடு என்கிறஇடத்தில இருந்த அவரது நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்றார்... அன்று இரவே திருமண ஏற்பாடு செய்து மறுநாள் காலை ரெஜிஸ்ட்டர் ஆபீசில் 5 ரூபாய் கட்டி நடந்தது ரெஜிஸ்டர் .. அருகில் இருந்த ஒரு சிறிய கோவிலில் நண்பர்கள் இருவர் முன்னிலையில் மாலை மாற்றி தாலி கட்டி நடந்தது எங்கள் திருமணம்.....சென்னையில் எங்களை தேடிய போலீஸ் அவர் நண்பர்களை பிடித்து அடித்த கதையை இன்றும் அவர் நண்பர்கள் சொல்லி சிரிப்பார்கள்....சென்னை திரும்பிய எங்களை பிடித்த போலீஸ் DC இவர் கட்டிய தாலியை கழற்றி கொடுக்கும்படி என்னை மிரட்டியதும் ,,,பின்னர் வாழ்வில்நல்ல நிலையில் எங்களை பார்த்தது அவரே எங்களை பாராட்டியதும் என்றும் நினைவில் இருந்து அகலாத சித்திரங்கள்.....
 — remembering someone very special with Saidai Damu.


வெள்ளிவிழா சிறப்பு பதிவு 1(OCTOBER 3/2016)
TIME TRAVEL

எங்கள் திருமண வாழ்வில் வெள்ளிவிழா ஆண்டு இது...இந்த கால் நூற்றாண்டில் என்வாழ்வில் நடந்த சில சுவாரசியங்களை பதிவாக்கலாம் என்று நினைக்கிறேன்....

1990 ஆம் ஆண்டு .....அந்த தெருவில் நாங்கள் வீடு கட்டி வந்த அந்த நாளில் இருந்து பலர் சொல்லியது இந்த இடம் ரௌடிகள் அதிகமான இடம் என்று...அன்று அவர்கள் சொன்ன ரௌடிகளுக்கு எல்லாம் தலைவன் என்று அறியப்பட்ட தாமு பின்னாளில் என்பின்னே சுற்றுவார் என்றோ அவரின் ஹீரோயிசத்தில் மயங்கி நானும் சம்மதிப்பேன் என்று நினைக்கவில்லை.......புதிய பாதை படம் வந்த புதிது அது...அதன் தாக்கத்தில் அவர் kk நகர் சரவணபவனில் என்னிடம் காதலை சொன்னதும் மறுக்காமல் சம்மதித்தேன்....25 வருடத்திற்கு முன்பு காதலிக்க ஆரம்பித்த அந்தமனிதனும் மனிதியும் இவர்கள் தான்.......தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.

சனி, 4 பிப்ரவரி, 2017

பயணங்களின் பதிவுகள் தேனி மாவட்டம்  (மேகமலை)








    மேகமலை..... வெகுநாட்களாக  போக விரும்பிய ஒரு இடம்...அழகிய தேயிலை தோட்டங்களும் ,ஏலக்காய்அ தோட்டங்களும் ,அணைகளும்  ,முகத்தை வருடும் மேககூட்டமும் சில்லென்ற இயற்கை பிரதேசத்தை கனவு கொண்டு சென்ற எங்களுக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது ,,,மலை அடிவாரம் வரை புதிய ரோடு அழகாக இருந்தது ,,,வனகாவலரும் ஒன்றும் கூறாமல் அனுப்பினார்....மலைபாதை குண்டும்குழியுமாக  27கிலோமீட்டர் தூரத்தை  4 மணி நேரமாக  கடந்தோம் ...

     பாதை போடும் பொருட்டு  வழிநெடுக வெடி வைத்து வெடிப்பதால் புழுதியும் அனலுமாக இருந்தது ....மேலே சென்று  சேர்வதற்குள் சோர்ந்து போனோம் ...மேலே சென்றதும் ஹைவேஸ் என்கிற இடத்தை அடைந்ததும் அனல்  குறைந்து சற்று குளிர் உணர்ந்தோம்...பச்சை படுகையென விரிந்திருந்த தேயிலை தோட்டங்கள் சிறிய பள்ளத்தாக்கில் ஓடும் நீர் ... வீடு போன்ற மெஸ்,,,,குறைவான விலையில் சாப்பாடு என  அந்த இடத்தில உற்சாகமாக சில பொழுதுகளை கழித்தோம் .....
     
   சில இடங்கள் நேரில் பார்பதை விட கற்பனையிலேயே மிக அழகாக இருக்கும் என்பதை பார்த்து அனுபவித்து தெரிந்து கொண்ட இடம் ....