திங்கள், 3 ஜனவரி, 2011

ரணம்

உன்னை போலவே
ஆயிரம் சுடுசொல்
தெரியும் எனக்கு ......
உன்னை போலவே
நாக்கில் சவுக்குண்டு எனக்கும் ....
உன்னை போலவே
மனதை ரணமாக்கும்
தேள் கொடுக்கு நாக்குண்டு எனக்கும் ....
ஆனால் அதை எல்லாம்
பயன்படுத்த முடியாதபடி
தடுக்கிறது உன்னிடம் இல்லாமல்
என்னிடம் மட்டுமே இருக்கும்
அளவில்லாத அன்பு ...
அது ஏற்கிறது உன் தவறுகள்
அனைத்தையும் புன்னகையோடு ......

9 கருத்துகள்:

  1. நன்றி திரு.சதீஷ்குமார் ...தொடர்ந்து படித்து கருத்துகளை பகிருங்கள் .....

    பதிலளிநீக்கு