வீடுவீடாக ஏறி சென்று
தொலைக்காட்சி பார்த்த காலமொன்று
ஒளியும் ஒளியும் நாலணா
படம் பார்க்க எட்டணா ....
அப்பாவிடம் ஏச்சும்
அம்மாவிடம் தாஜாவும்
புரிந்து பெற்ற காசில்
கருப்பு வெள்ளை தொலைகாட்சியை
மெய்மறந்து ரசித்து பார்த்த காலமுண்டு .....
வண்ணத்தில் முதல்முதலாய்
வீட்டுக்கு தொலைக்காட்சி வந்ததும்
அக்காவிடமும் தம்பியுடனும்
சண்டை போட்டு ரசித்த நிகழ்ச்சிகள் ஏராளம் .......
இன்று வெவ்வேறு அளவினில்
ஒவ்வொரு அறையினிலும் தொலைக்காட்சி
காசு கொடுக்க வேண்டியதில்லை
சண்டை போட ஆளுமில்லை
கண்கள் வெறுமையுடன் பற்றில்லாமல் கடக்கின்றன
தொலைந்து போன பழைய காட்சிகளை எண்ணியபடி .....
இளமை காலங்களை நினைவு படுத்தும் கவிதை சித்ரமாளவில் வரும் ஒரு தமிழ் பாடலுக்கு ஏங்கிய அந்த காலங்கள் அருமையான கவிதை
பதிலளிநீக்குஅனைவருக்குள்ளும் இருக்கும் ஏக்கங்களின் ஒரு நிகழ்வை இயல்பாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்..
பதிலளிநீக்குhttp://karadipommai.blogspot.com/
இதே போன்ற தொலைக் காட்சி பார்த்த அனுபவம் எனக்கும் இருக்கிறது சகோ,
பதிலளிநீக்குகவிதை எங்கள் பிஞ்சுப் பருவத்தைக் மீண்டும் நினைத்துப் பார்க்க வைக்கிறது.
பல மாற்றங்களை கூறி இருக்கின்றீர்...
பதிலளிநீக்குநிறைய இழப்புகள் தான் மிச்சம் ..
வரிகள் அருமை ..
நன்றி பிரபாஷ்கரன்...
பதிலளிநீக்குநன்றி லாலி ......
பதிலளிநீக்குநன்றி நிரூபன்
பதிலளிநீக்குநன்றி அரசன் ...........
பதிலளிநீக்குவெறிச்சோடி போன வீதிகளில்
பதிலளிநீக்குவிதியை நினைத்து வருந்திய
நாட்கள் - ஒரு
கருப்பு வெள்ளை டிவி
வாங்கிய போது மாறியது
தங்களோடு என்னையும்
அந்த நாட்களை
அசை போட வைத்த
கவிதைக்கு வாழ்த்துக்கள்
யாதோன் கி பாராத்.
பதிலளிநீக்குஒவ்வொருவர் வாழ்விலும் நிறைவேறாத ஆசைகள் உண்டு. சிறார் பருவத்தில் நமக்கு கிட்டாத பல வாய்ப்புகள்,ஆசைகள் இப்போது வசதி வாய்ப்பால் கிடைக்கப்பெற்றாலும் அந்த பருவத்தில் கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றே எண்ண வைக்கும். அது மனித மன பலஹீனம். எது கிடைக்க வில்லையோ அதை எண்ணி ஏங்கும் மனித மனம்.நீட் கவிதை மேடம்
பதிலளிநீக்குNostalgic Moments
பதிலளிநீக்குClassic
Vijay
simply super suja...congrats...
பதிலளிநீக்கு