சனி, 11 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா (october 3/2016


) சிறப்பு பதிவு 14
TIME TRAVEL 

2003....வாழ்கைனா ஏற்ற இறக்கங்கள் இருக்காமல் இருக்குமா?..இவருக்கும் இறங்கு முகம் வந்தது...இவர் கடையின் அருகிலேயே மிக பெரிய அளவில் மொத்த வியாபாரமாக சிமெண்ட் ஹார்டுவேர் கடை ஒன்று ஆரம்பித்தார்கள்....அது வரை தனி ராஜாங்கமாக இருந்த இவரது வியாபாரத்தில் அடிவிழ ஆரம்பித்தது....அவர்கள் கொடுத்த விலையில் இவரால் கொடுக்க முடியாததால் வியாபாரம் சரிய ஆரம்பித்தது...எப்போதும் பரபரப்பாக இருந்த இவர் சோர்வடைய ஆரம்பித்தார்....கடையை தொடர்ந்து நடத்தி கொண்டு இருந்தால் நஷ்டம் அதிகமாகும் என்பதால் கடைகளை மூடி விட முடிவெடுத்தார்.....தொடரும் — remembering someone very special with Saidai Damu.
வெள்ளிவிழா (october 3/2016


)சிறப்பு பதிவு 13
TIME TRAVEL

2002 ....மகனும் மகளும் திருமதி லதா ரஜினிகாந்த் அவர்கள் நடத்தும் ஆஷ்ரம் பள்ளியில் படித்து கொண்டு இருந்தார்கள்....பாபா படம் அப்போது தான் தயாரிப்பில் இருந்தது..என் மகன் விக்கிககு அதில் ஒரு பாடலில் திரு ரஜினி அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது...முதல் பாடலில் நடித்தான்...

அந்த வருடத்தில் என்னவருக்கு கார் வாங்க வேண்டும் என்கிற விருப்பம் வந்தது...உடனே எதை வாங்குவது என்று யோசித்தோம்...சிறிய கார் வாங்கி நாம் மட்டுமே பயணிப்போம் என்கிற குறுகிய எண்ணம் எங்கள் இருவருக்குமே இல்லை,,,ஆகையால் பெரிய கார் வாங்கி எங்கு சென்றாலும் குடும்பத்தினர் அனைவருடனும் சேர்ந்து பயணிக்க விரும்பி குவாலிஸ் கார் வாங்கினார்,,,,
அன்றில் இருந்து இன்று வரை அவர் பிறந்த வீட்டினரும் சரி என் பிறந்த வீட்டினரும் சரிஅதிகளவு டூர் பயணித்தது இந்த காரில் தான்...முதலில் ஊட்டி, கேரளாவுக்கு செல்வதில் ஆரம்பித்தது எங்கள் பயணங்கள்......தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.
வெள்ளிவிழா (october 3/2016



)சிறப்பு பதிவு 12
TIME TRAVEL

2001....பையன் படிக்கும் ஆஷ்ரம் பள்ளியிலேயே ஐஷுவையும் சேர்த்தார்...விக்கி ஸ்கூல் போகணும்னாலே எப்பவும் அழுகை தான் ரொம்ப செல்லம்....ஐஷுவை முதல் நாள் பள்ளியில் சேர்க்கும் போது அழுகையை எதிர்பார்த்தே போனோம்....ஆனா அபியும் நானும் படத்தில் வர மாதிரி அவ திரும்பி கூட பார்காம போயிட்டாள்....நானும் அவரும் கண்கலங்கி திரும்பி வந்தோம்....
கல்யாணம் ஆன நாள் முதல் குடும்பத்தை இணைப்பதும் பணம் சம்பாதிப்பதும் மட்டுமே லட்சியமாக இருந்த நாங்கள் கொஞ்சம் வாழ்கையை ரசிக்கவும் ஆரம்பித்தோம்...
அம்மாக்களுக்கு பிள்ளைகள் மிக பெரிய பலம்...மனைவி வெளியில் போகணும்னு சொன்னால் மறுக்கிற கணவன் பிள்ளைகள் கேட்டதும் உடனே தலையாட்டுவார்கள்....அப்படித்தான் இவரும்...வெளியில் போவது என்றாலே இவருக்கு கசக்கும்...ஆனால் பிள்ளைகள் கேட்டதும் சினிமா பீச் என்று அவர்களுக்காக வர ஆரம்பித்தார்........தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.
வெள்ளிவிழா (october 3)சிறப்பு பதிவு 11
TIME TRAVEL 

2000....சிமெண்ட் பிசினஸ் நன்றாக போய்கொண்டிருந்ததால் அதை தொடர்ந்து ஹார்டுவேர் கடை தொடங்க முடிவு செய்து இதன் எதிரிலேயே புதியதாய் கடை ஒன்றை தொடங்கினார்....
குழந்தைகள் வளர்ச்சியை அருகில் இருந்து ரசிக்கும் பாக்கியம் எப்போதுமே அம்மாக்களுக்கு கிடைக்கும் அளவு அப்பாக்களுக்கு கிடைபதில்லை....
வியாபாரதில் கவனம் என்பதால் எப்போதும் பிஸியாக இருப்பார்...பிள்ளைகள் வளர ஆரம்பித்தனர்....பிள்ளைகளின் படிப்பு ,அவர் கடை என்று வாழ்கை ஒரு நேர்கோட்டில் சென்றுகொண்டிருந்தது..... — remembering someone very special with Saidai Damu.


வெள்ளிவிழா (october 3)சிறப்பு பதிவு 10
TIME TRAVEL 

1999...
மகளின் முதல் பிறந்தநாளை விமர்சையாக ஏற்பாடு செய்தார்....

இப்போதெல்லாம் வெளியில் சென்றால் ஒருமணி நேரத்திற்கு ஒரு முறையாவது போன் பேசி விடுவார்...அப்போது அதற்கான வசதி கிடையாது.....முதலில் பேஜர் வசதி வந்ததும் அதை வாங்கினார்...பின் முதன் முதலில் RPG செல் வந்ததும் அதை வாங்கினார்...வீட்டில் லேன்ட் லைனுக்கு செல்லில் இருந்து பேசி கொண்டே இருப்பார்...எப்போதும் எங்களை விட்டு எங்கேயும் தனியே செல்லவே மாட்டார்...இது வரை தனியாக நண்பர்களுடன் டூரோ வெளிநாடோ சென்றது இல்லை...அவர்க்கு குடும்பம் தான் எல்லாமே...தொடரும் — remembering someone very special with Saidai Damu.



வெள்ளிவிழா (october 3/2016


)சிறப்பு பதிவு 9
TIME TRAVEL

1998 ....சில விஷயங்கள் நாம் எதிர்பாராமல் நமக்கு கிடைக்கும்,....சில விஷயங்கள் நாம் வேண்டி விரும்பி அதன்பால் கிடைப்பது அப்படி கிடைத்த ஒன்று எங்கள் செல்ல மகள்...

மகள் பிறந்த நேரம் புதிய வீடு கட்ட ஆரம்பித்தார்...மாடியிலேயே அருகில் .இருக்கும் இடத்தில யாருடைய ஆலோசனையும் இல்லாமல் தன் விருப்பப்படிவீடு கட்டினார்.... புதிய வீட்டில்மொ மகளின்ழி மழலை மொழி கேட்கவே வீடு தேடி ஓடி வருவார்...அதுவரை ஏசி அறையில் இருந்ததில்லை.... புதிய வீட்டில் ஏசி அறையில் அவர் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் அறையே புகையால் நிறைந்திருக்கும்...அப்போதெல்லாம்.கையில் சிகிரெட் இல்லாமல் அவரை பார்க்கவே முடியாது . மகள் இருக்கும் அறையில் புகை பிடிக்க முடியாத காரணத்தால் பால்கனியிலேயே நின்று புகைப்பார்....என் அப்பாவை போன்றே இவரும்செயின்ஸ்மோகர்.. மாமனாருக்கும் மருமகனுக்கும் எப்போதும் ஆறாம் விரலாய் சிகிரெட் இருக்கும் .....என் அப்பாவிற்கு புகை பழக்கத்தால் பக்கவாதம் வந்தது இவர் மனதை வெகுவாக பாதித்தது...தொடர்ந்து அவர் நண்பர் ஒருவர் புகையால் மரணம் அடைந்ததும் கேள்விப்பட்ட அந்த நிமிடம் கையில் இருந்த சிகிரெட் லைட்டர் இரண்டையும் மாடியில் இருந்து தூக்கி அடித்தார்..20வருடமாக கையில் இருந்த சிகிரெட்டை ஒரு நொடி முடிவில் துறந்தார்......இன்று வரை அதை தொடவில்லை....தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.
வெள்ளிவிழா (october 3/2016


)சிறப்பு பதிவு 8
TIME TRAVEL

1997.....திருமண வாழ்விலும் வியாபாரத்திலும் அவர் பெற்ற வெற்றி அவரின் தன்னம்பிக்கையை அதிகரித்தது...அவர் தன் வாழ்க்கைமுறையை மாற்றி கொள்ள ஆரம்பித்தார்...பணம் வந்ததும் ஒரு மனிதனின் தோரணைகள் மாறுவது ஏனெனில் அவனுக்கே தன்மேல் பெரும் நம்பிக்கை வருவதால் தான்.... .

உறவுகள் எல்லாம் அவர் மேல் பெரும் நம்பிக்கையும் மரியாதையையும் கொள்ள ஆரம்பித்தனர்....பொறுப்பில்லாத ரௌடி பையன் என்கிற பெயர் மாறி ஒரு பொறுப்புள்ள குடும்ப தலைவனாகவும் ஒரு சிறந்த வியாபாரியாகவும் அனைவரும் மதிக்க தொடங்கினர்..இரு குடும்பத்தினரும் இவரின் ஆலோசனை கேட்டு செயல்படும் அளவில் இவரது வளர்ச்சி இருந்தது.... அது வரை தனியே வசித்து வந்த நாங்கள் அவர் அம்மாவின் வீட்டு மாடியில் சிறிய அளவில் ஒரு கூரை வீடு கட்டி அதில் குடி வந்தோம்...மாடியில் தனியே வசித்தாலும் அவர்கள் அனைவருடனும் கூட்டு குடித்தனம் போலவே நாங்கள் மகிழ்வுடன் வாழ ஆரம்பித்தோம்...தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.