திங்கள், 20 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா (october 3/2016


) சிறப்பு பதிவு 21
TIME TRAVEL

2011.........எங்களுக்கு இருபதாவது கல்யாண ஆண்டு...எங்கள் திருமணம் நடந்த கோயிலின் பெயர் கூட எனக்கு தெரியாது...எங்கள் திருமணத்தின் போது புகைப்படம் கூட எடுக்கவில்லை.... பிறகு கடந்து போன இருபது வருடமும் அந்த கோவிலோ அந்த இடமோ என் நினைவில் இல்லை...இருபதாவது வருட திருமணநாளில் அந்த கோயிலுக்கு சென்று பார்க்க வேண்டும் என விரும்பினேன்....அதனால் செய்யூர் சூனாம்பேடு என்கிற இடத்தில இருக்கும் தீப்பாஞ்சம்மன் என்ற அந்த கோயிலுக்கு அழைத்து சென்றார்...முதல்முறை இந்த கோயிலுக்கு வரும் போது பயமும் குற்றஉணர்வும் மனக்குழப்பமும் நிறைந்திருந்தது....அத்தனை வருடம் கழித்து போனபோதுஅந்த கோயிலும் அதை சுற்றி உள்ள இடத்தையும் பார்த்ததும் ஒரு ஆத்மார்த்த அமைதி சூழ்ந்தது இருவருக்குள்ளும்....... to be continued. ...
 — remembering someone very special with Saidai Damu.
வெள்ளிவிழா (october 3/2016


) சிறப்பு பதிவு 20
TIME TRAVEL

2010....எனக்கு பயணங்கள் மிக பிடிக்கும் ...ஆனால் அவர் பயணங்களையே விரும்பாதவர்...வீடு தான் சொர்க்கம் அவருக்கு ...திருமணம் ஆகி பல வருடம் கழித்து தான் பயணங்கள் எனக்கு பிடிக்கும் என்பதை அவருக்கு புரிய வைத்தேன்...அதற்கு பின் சில பயணங்கள் போனதும் அவருக்கும் அதில் ஆர்வம் வந்து விட்டது...நிறைய பயணங்கள் செய்ய ஆரம்பித்தோம்...அப்படி போன ஒரு பயணத்தில் தான் மிக பெரிய விபத்து நடந்தது ...ஏற்காட்டில் இருந்து இறங்கி வரும் வேளையில் வாகனம் கவிழ்ந்து பள்ளத்தில் விழ வேண்டிய வண்டி சிறிய தடுப்பினால் தடுக்கப்பட்டு உயிர் பிழைத்தோம் ,,,அன்று எனக்கும் மகனுக்கும் காயம் பட்டது...அவருக்கும் மகளுக்கும் காயம் எதுவுமில்லை...அன்று அவர் தோளில் என் கைபையை மாட்டி கொண்டு எங்களுக்கு அடிபட்டதை தாங்க முடியாது பரிதவிப்போடு என்னுடனே அலைந்தது மனதில் உறைந்த சித்திரத்தில் ஒன்று .....தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.
வெள்ளிவிழா (october /20163) சிறப்பு பதிவு 19
TIME TRAVEL 

2008 ..2009..சில வியாபாரம் பெரிய அளவில் வெற்றியை தேடி தரும்....12 வருடங்கள் அவர்நடத்திய கடை வருமானத்தை விட ரியல் எஸ்டேட் வியாபாரம் அதிகபட்ச முன்னேற்றத்தை தந்தது....1998 சிறியதாக கட்டி குடியேறிய வீட்டை கொஞ்சம் விரிவு படுத்தி பெரிய அளவில் கட்டினார்....

திருமணம் ஆன புதிதில் இந்த வீடு தேடி வந்த அவரை அவரது தந்தை வீட்டிற்குள் நுழையவே கூடாது என்று கட்டை எடுத்து கொண்டு அடிக்க ஓடி வந்தார்.....17 வருடங்கள் கழித்து ஆறு பேருக்கு சொந்தமான அந்த வீட்டினை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அவர்களுக்கான பங்கினை கொடுத்து அப்பா வீட்டை தனது சொந்த முயற்சியினால் தனது வீடாக்கினார்..........தொடரும் — remembering someone very special with Saidai Damu.

வெள்ளிவிழா (october 3) சிறப்பு பதிவு 18
TIME TRAVEL

2007...வியாபாரமும் வாழ்கையும் நல்லபடியாகவே போனது....நிறைய பயணம் செய்ய ஆரம்பித்தோம்...முன்பெல்லாம் கடையை விட்டு வர முடியாததால் எங்கும் போவது அரிதாக இருந்தது...கடை மூடியதும் வீட்டில் இருந்தே வியாபாரம் செய்ததால் அனைத்தையும் போனிலேயே முடிக்க ஆரம்பித்தார்..... பயணங்கள் அதிகமாயின....

பிள்ளைகள் விஷயத்தில் அவர் அப்படியே சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ்ராஜ் தான்....பிள்ளைகளுக்கும் சேர்த்து இவரே எல்லாவற்றையும் யோசிப்பார்....99% சுதந்திரம் கொடுத்திருந்தாலும் 1% கண்டிப்பால் தன் கட்டுக்குள்ளே வைத்திருப்பார் பிள்ளைகளை .....மகன் வெளிநாடு போனபிறகும் காலை முதல் இரவுவரை பேசிக்கொண்டே இருப்பார்... அப்பா எந்த நிமிடம் போன் செய்வார் என்பது மகனுக்குஅத்துபடி...அப்பாவுக்கும் மகனுக்கும் அப்படி ஒரு அலைவரிசை....மகளாவது கொஞ்சம் சுயம் பேசுவாள் ...மகன் அப்பா நினைத்ததை மட்டுமே பேசுவான்....அப்படி ஒரு நெருக்கம் அவர்களுக்குள்....மகளுக்கு என்னிடம் தான் நெருக்கம் ....பிள்ளைகள் எப்போதும் அருகிலேயே இருக்க வேண்டும் அவருக்கு...எங்களுக்குள் ரகசியங்கள் என்று எதுவுமில்லை....எல்லாவற்றையும் டிஸ்கஸ் பண்ணுவோம் .....தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.

வெள்ளிவிழா (october 3/2016


) சிறப்பு பதிவு 17
TIME TRAVEL

2006......ரியல் எஸ்டேட் வியாபாரம் மிக நல்லமுறையில் தொடர ஆரம்பித்தது...அவருக்கு அந்த துறை, வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை தந்தது....மிக மும்முரமாக வியாபாரம் செய்து சம்பிதிக்க தொடங்கினார்.....

அவரது குணத்தை பற்றி எளிய வகையில் சொல்ல வேண்டும் என்றால் நாசர் சார் நடித்த எம்டன்மகன் போன்ற குணம்....முன்கோபம் .ஈகோ.உறவுகளை தூக்கி அடிக்கும் மூர்க்க குணம்,சுயநலம் இதெல்லாமும் உண்டு....ஆனால் அந்த படத்தின் இறுதியில் வருவது போல் இவரின் வாழ்வே எங்களுக்காக என்பதில் அவை எல்லாம் தூசியாகிறது ...பாகற்காய் சாப்பிட்டதும் அதன் சுவையை யாரும் நாக்கிலேயே வைத்து கொள்ள விரும்புவதில்லை...உடனே ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு அதை மறக்கடித்து விடுவோம்...அது போல் இவரது கசப்புகளை மறக்க செய்வது எங்கள் மேல் அவருக்கு உள்ள அன்பு...அவரது கோப புயலில் ஒடிந்து போக நானொன்றும் மூங்கில் இல்லை...வளைந்து நிமிரும் நாணல்.... ஏனெனில் எங்கள் மூவரை தவிர வேறு உலகமே இல்லை....இது அவரை சுற்றி உள்ள நண்பர்கள் உட்படஅனைவர்க்கும் தெரியும்...ஒரு நிமிடம் கூட எங்கள் நினைவுகளை மட்டும் அவர் விடுவதே இல்லை.....அவரது உலகம் நாங்கள் தான் என்பது எங்களுக்கு தெரியும்...பிள்ளைகள் விஷயத்தில் அவர்.....தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.
வெள்ளிவிழா (october 3/2016) சிறப்பு பதிவு 16
TIME TRAVEL

2005....ட்ராவல்ஸ் பிசினஸ் கொஞ்சம் கடினமான பணி என்பது சிறிது காலத்தில் புரிந்தது....இவரது கோப குணத்திற்கு அது ஒத்துவரவில்லை....எனவே ஒரு வருடத்திற்குள்ளாகவே அதை மூடும்படி ஆயிற்று.....ரியல் எஸ்டேட் துறையும் அரசியலும் இன்று வரை தொடர்கிறது.....

கணவன் மனைவி உறவில்திருமணம் ஆன உடனே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது என்பது இயலாத காரியம்....என் காதலில் எனக்கு திருமணம் ஆகும் போது இப்போது பிள்ளைகள் யோசிக்கிற அளவிற்கு எல்லாம் எனக்கு வாழ்கையை பற்றிய அறிவில்லை....காதல் என்றால் காதல் அவ்வளவு தான்....அதன் பின் வருகிற வாழ்வை பற்றி சிந்திக்கும் முன்னரே திருமணம் ஆகி விட்டது....திருமணம் ஆன புதிதில் இருந்தே அவருக்கு எப்படி பணம் சம்பாதிப்பது என்றும் எனக்கு புது உறவுகளின் பற்றிய சிந்தனையும் என காலம் போனது உடனே மகன் பிறந்தான் அவனை வளர்க்க வேண்டிய பொறுப்பு....அதன் பிறகு மகள் அவளுடன் கழிந்த காலங்கள்....இவர் கடையை மூடி பிள்ளைகளும் சற்று வளர்ந்த பிறகு தான் எங்களுக்குள் மிக புரிதல் உண்டாயிற்று....அவரது குணம் எப்படி என்றால்.....தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.

வெள்ளிவிழா (october 3/2016) சிறப்பு பதிவு 15
TIME TRAVEL
2004......என்றுமே வளர்ச்சியில் துணை நிற்காதவர்கள் விமர்சனம் செய்வதில் மட்டும் முதலில் நிற்பார்கள்....இவர் கடை மூட முடிவெடுத்ததும் எல்லோரும் அதை மூட வேண்டாம் எனறு அறிவுரை சொல்ல ஆரம்பித்தனர்.....கடன் வாங்கி முதலீடு செய்யலாம் என்று சொன்னார்கள்....ஆனால் மிக பெரிய முதலீட்டுடன் தொடங்கிய ஒரு வியாபாரத்துடன் கடன் வாங்கி மோத முடியாது என்று முடிவெடுத்து கடையை மூடி விட்டார்....அடுத்து என்ன செய்வது என்று தயங்கி யோசிக்க நேரமில்லா வகையில் மகனும் மகளும் வளர்ந்து விட்டனர்....மகன் பெயரில் டிராவல்ஸ் ஆரம்பித்தார்....கூடவே ரியல் எஸ்டேட் பண்ணவும் அரசியலில் ஈடுபடவும் ஆரம்பித்தார்...வீட்டு செடி என்றால் எவேரேனும் நீர் விட்டு வளர்க்க வேண்டும் இவர் தன்னிச்சையாக வளரும் காட்டு மரம்...அந்த துறைகளிலும் விரைவில் காலூன்றி விட்டார்....தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.