திருமணமானதும் மாறியது
எனக்கு பிடித்தமான வண்ணங்கள் ,
உணவுகள் ,ஆசைகள் கணவரது
எண்ணங்களுகேற்றபடி .....
கணவருக்காக காட்டன் புடவைகளும்
பிள்ளைகளுக்காக நாகரீக உடைகளும்
மாற்றி கொண்டதில் மறைந்தே போனது
எனது பட்டுப்புடவை மோகங்கள் ......
கணவரது உறவினர்களையும்
பிள்ளைகளது தோழர் தோழிகளையும்
நேசிக்கும் பொழுதினில் நினைத்து
பார்க்கிறேன் தொலைந்து போன எனது
சொந்தங்களையும் தோழிகளையும் .......
பிள்ளையின் அலைபேசி அவனுக்காகவும்
பெண்ணுடைய அலைபேசி அவள் சொந்தமாகவும்
கணவர் அலைபேசி அவரது நண்பர்களுக்காகவும்
ஆகி போனதில் எனது அலைபேசி மட்டும்
பொதுவானது எனக்கெதுவும் அந்தரங்கம்
இல்லையென கூறி.......
கணவரது விருப்பதிற்காக அவர்
உறவினர் வீடுகளுக்கும்
பிள்ளைகள் விருப்பதிற்காக குளிர்
பிரதேசமும் பயணப்பட்டு களைத்ததில்
நிறைவேறாமல் போனது எனது அருவியில்
நனையும் ஆசைகள் .....
அலுவலகத்தில் கணவரும்
கணினி முன் பிள்ளையும்
தொலைக்காட்சிப் பெட்டியின் முன் மகளும்
முடங்கிப்போனதால் அடுப்படியே
உலகமாகிப் போனது எனக்கு ........
கடலில் இட்ட பெருங்காயாமாய்
என் கனவுகளை குடும்பத்தில் தொலைத்து
'நான்' என்ற சுயத்தை தொலைத்து பெற்றதோர்
பெயர் 'அருமையான குடும்ப தலைவி '
100 வருஷம் இந்த கவிதைகளும், நீங்களும் பேரு விளங்க இங்கே வாழனும்.. # பணக்காரன் பாட்டு உல்டா
பதிலளிநீக்கு>>கடலில் இட்ட பெருங்காயாமாய்
பதிலளிநீக்குஎன் கனவுகளை குடும்பத்தில் தொலைத்து
'நான்' என்ற சுயத்தை தொலைத்து பெற்றதோர்
பெயர் 'அருமையான குடும்ப தலைவி '
அழுத்தமான பதிவு மேடம்
இல்லத்தரசியின் தனிமை கவிதையாய்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
Good Explanation :)
பதிலளிநீக்குஉண்மையான வரிகள்.கவிதை அருமை .வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதனிமைகளுக்குள்ளும், நாகரிகப் போர்வையினுள் சுதந்திரமற்ற ஒரு உயிராகவும் முடக்கப்பட்டிருக்கும் குடும்பப் பெண்ணின் உணர்வுகளை வலிகளின் வார்த்தைகளாக கவிதையில் கூறியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குகுடும்பத் தலைவி; இக் கால இல்லத்தரசிகளின் தனிமையினைப் படம் பிடித்துக் காட்டும் நிஜங்களின் பிரதிபலிப்பு
நன்றி செந்தில்குமார் சார் ....
பதிலளிநீக்குநன்றி விஜய்........
பதிலளிநீக்குஉங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி அஹ்மத். ,ஆயிஷா அபுல் ,நிரூபன் .......
பதிலளிநீக்குஅருமையா இருக்கு மேடம்....
பதிலளிநீக்குநன்றி திரு மனோ சார் .....
பதிலளிநீக்கு