வெள்ளி, 29 ஏப்ரல், 2011

அப்பாவும் நானும்


ஏசி காரில் சொகுசு பயணம்
தூசி படாமல் பயணிக்கும் அனுபவம்
ரயிலிலோ பேருந்ததிலோ நெரிசலில்
அவதியுற அவசியமில்லை
பயணம் என்னவோ சுகமானது தான்
ஆனால் .........
கால்கடுக்க காத்திருந்து பேருந்தில்
இடிபடாமல் பாதுகாத்து
கையிருப்பெல்லாம் கரைந்தாலும்
பிள்ளைகளின் முகமலர்வை மட்டுமே
கருத்தாக கொண்டு கதை சொல்லியே
நடக்க வைத்து வீடு கொண்டு வந்து
சேர்க்கும் அப்பாவுடனான பயணங்கள்
அளித்த ஆனந்தம் இல்லை
இன்றைய பயணங்களின் போது .......

8 கருத்துகள்:

 1. ஒவ்வொரு பெண்ணுக்கும் அப்பாவுடனான பயணம் இனிமையானதே.. அதை வார்த்தைகளில் வடித்த விதமும், இன்றைய வாழ்வோடு ஒப்பீடு செய்த விதமும் அழகு.

  பதிலளிநீக்கு
 2. அருமையான கவிதை தோழி...நாம் எவ்வளவு தான் பொருளாதார ரீதியா வளர்ந்தாலும், நம் வளர்ச்சியின் வேர்கள், நமக்காய் தனை வருத்தி, நமை வளர்த்த அந்த அனுபவங்கள் என்றும் அருமை என்பதை தங்கள் கவிதை அழகாய் உணர்த்தியது....வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. உண்மை, முற்றிலும் உண்மை

  வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு