பத்ம வியுகமாய் சில சூழல்கள் உள்ளே நுழைகிறோம் அலட்சியமாய் வெளிவரும் பாதை தெரிவதில்லை வேதனைகள் தாக்கும் போது வெளியேற துடிக்கிறோம் போகும்பாதை தெரியாததால் தடுமாறி தவிக்கிறோம் நுழைந்தால் வெளியேற முடியாத பத்ம வியூகத்தின் மறுபெயர் காதல் .......
வரிசையில் நிற்பதினால் கடுப்பான கணவர் முகமும் நிற்பதினால் உண்டான வலியையும் காத்திருப்பதினால் உண்டாகும் எரிச்சலையும் அனைத்தையும் மறக்க செய்கிறது முன்னே நிற்கும் பெண்ணின் தோளில் சாய்ந்து எனை பார்த்து சிரிக்கும் குழந்தையின் பார்வையில் ......
இருள் சூழ்ந்த குழியின் உள்ளிருந்து அண்ணாந்து தேடுகிறேன் இழையாய் வருகிறது நம்பிக்கை என்னும் ஒளி கயிறாக இல்லையென கலங்கி நிற்காமல் இழை பற்றி ஏறுகிறேன் என்றேனும் ஒருநாள் ஒளி பிறக்குமென .....
என் பலவீனங்கள் எல்லாம் உனக்கு பலம் ... என் குற்றங்கள் எல்லாம் உனக்கு சாதகம்.... என் வீழ்ச்சிகள் எல்லாம் உன் உயர்வு .... எப்போதும் என்னையே உற்று நோக்கும் உன் பார்வையால் எனக்கு சங்கடங்கள் ஏதுமில்லை... பலவீனங்களும் குற்றங்களும் வீழ்சிகளும் இல்லாமல் என்னை பயணப்பட வைக்கிறது உனது பார்வை .....